நாவூற வைக்கும் காரசாரமான 'சிக்கன் உப்பு கறி' டேஸ்ட் சும்மா அள்ளும் இப்படி செஞ்சா...

By Kalai SelviFirst Published Jan 11, 2024, 2:40 PM IST
Highlights

மழைக்காலம் நடந்து கொண்டிருப்பதால், இந்த சமயத்தில் சிக்கன் உப்பு கறி சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும். எனவே, இந்த சிக்கன் உப்பு கறி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள், டேஸ்ட் சும்மா தூள் பறக்கும்.

பொதுவாகவே, சிக்கன் என்று சொன்னாலே, பலரது நாவில் எச்சில் ஊறும். அந்த அளவிற்கு சிக்கனின் ரசிகர்கள் பலர் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் பலருக்கு வார இறுதியில் அசைவம் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. அந்தவகையில், எப்பவுமே ஒரேமாதிரியான சிக்கன் சாப்பிட்டு போரடிச்சா, இந்த வார இறுதியில் 'சிக்கன் உப்பு கறி'யை நிச்சயம் முயற்சிக்கலாம். இது குறைந்த நேரத்தில் எளிய முறையில் செய்யக் கூடிய ஒரு சூப்பரான சைடு டிஷ் ஆகும். மேலும் இதனை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சிக்கன் உப்பு கறியை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக, தற்போது  மழைக்காலம் நடந்து கொண்டிருப்பதால், இந்த சமயத்தில் சிக்கன் உப்பு கறி சாப்பிடுவது அற்புதமான ஒரு அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும். எனவே, இந்த வாரம் கண்டிப்பாக ஒரு முறை இந்த சிக்கன் உப்பு கறி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள், டேஸ்ட் சும்மா தூள் பறக்கும்.

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 20
வரமிளகாய் - 25
பூண்டு - 10
கரம் மசாலா - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது
கருவேப்பிள்ள
நல்லெண்ணெய்
மிளகுத்தூள்
உப்பு
மிளகாய்த்தூள்
சோம்பு

இதையும் படிங்க:  காரசாரமான பள்ளிபாளையம் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்; இதுவும் கொங்குநாடு ஸ்பெஷல்தான்!!

செய்முறை:

  • இதனை செய்வதற்கு முதலில், சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு சிக்கனில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள்தூள் உப்பு மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, சுமார் கால்மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
  • அதன்பின்னர், ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சோம்பு வெங்காயம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இவற்றுடன் 10 பல் பூண்டையும் சேர்க்க வேண்டும். பின்பு சிக்கனை சேர்க்க வேண்டும்.
  • சிக்கன் நன்கு வதங்கியவுடன் அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் மிளகு பொடி சேர்க்க வேண்டும்.
  • சிக்கன் நன்கு வெந்தவுடன் இறக்க வேண்டும். அவ்வளவு தான் மிகவும் சுவையான சிக்கன் உப்பு கறி ரெடி!!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!