கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடும் உணவு தான் அவர்களது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அதிகமான சத்துக்களை கொடுக்கும். அந்த வகையில் கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா? இல்லையா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
முட்டை நம் அன்றாட உணவுகளில் ஒன்று. இதில் புரதம், வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி 6, கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட நம் உடலுக்குத் தேவையான ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளன. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவது மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் வேகவைத்த முட்டையை சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்து கிடைக்கும் மேலும் குழந்தையை ஆரோக்கியமான முறையில் பெற்றெடுக்கலாம்.
undefined
இருப்பினும் சில கட்டுப்பாடுகளுடன் கர்ப்பிணி பெண்கள் முட்டைகளை சாப்பிடுவது நல்லது. அது குறித்து பார்க்கலாம் வாங்க..
கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா?
முட்டையில் தாதுக்கள், வைட்டமின்கள் நிறைந்திருப்பதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டாம். இவ்வாறு சாப்பிட்டால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் தாய்க்கும் குழந்தைக்கும் கிடைக்கும். தினமும் 1-2 முட்டைகள் வரை சாபிடலாம்.
மூளை வளர்ச்சி:
முட்டையில் கோலின் அளவு நிறைந்து காணப்படுகிறது. இது வயிற்றில் உள்ள கருவின் மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும்
இது குழந்தைக்கு வரும் பல நோய்களைத் தடுக்கிறது.
மஞ்சள் கருவை சாப்பிட்டாலாமா?
இதில் சுமார் 70 கலோரிகள் உள்ளதால் மஞ்சள் கரு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிங்க: கண்கள் ஆரோக்கியமா இருக்கணுமா?..அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க!
கொழுப்பின் அளவு சரி செய்ய:
முட்டைகளை தொடர்ந்து சாப்பிடு வந்தால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை சமன் செய்யயும். உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பொறுத்து முட்டையை தினசரி உண்ணலாம்.
கொலஸ்ட்ரால் அளவு சாதாரணமாக இருந்தால் வாரத்திற்கு 3-4 முட்டைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.
கர்ப்ப காலத்தில் வேகவைத்த முட்டைகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இது முட்டையில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றும்.
கர்ப்ப காலத்தில் வேகாத முட்டை அல்லது பச்சை முட்டையை சாப்பிட்டால் வயிற்று வலி காய்ச்சல் மற்றும் கருக்கலைப்பு கூட ஏற்படலாம்.
எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைவரும் வேக வைத்த முட்டையை சாப்பிடுவது மிகவும் சிறந்தது.