சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். இதனை எப்படி எளிமையாக , சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் பள்ளி முடிந்து களைத்து வரும் குழந்தைகளுக்கு , அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளை ஸ்னாக்ஸ்ஸாக கொடுத்தால், துளி கூட மிச்சம் இல்லாமல், சத்தமில்லாமலல் , ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தான் விளையாட கூட செல்வர். அப்படியான ஒரு ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம்.என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?
சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் தான் இன்று நாம் பார்க்க உள்ளோம். இதனை எப்படி எளிமையாக , சுவையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சாக்லேட் பால்ஸ் இப்படி சுவையாக செய்து தருவதால், இதனை நீங்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸிலும் வைத்து கொடுத்து அனுப்பலாம் . மேலும் இதனை பக்குவமாக ஒரு பாக்ஸில் வைத்து 10 நாட்கள் வரை வைத்துக் கூட சாப்பிடலாம். வாங்க இந்த சுவையான சாக்லேட் பால்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்:
மில்க் பிஸ்கட்ஸ் - 10
கோகோ பவுடர் - 3 ஸ்பூன்
கன்டன்ஸ்டு மில்க் - 1/4 கப்
முந்திரி-10 கிராம்
பிஸ்தா-10கிராம்
பாதாம்-10கிராம்
வால் நட் -10 கிராம்
தேங்காய் துருவல் - 1/4 கப்
உச்சி குளிர "வெள்ளரிக்காய் மோர் குழம்பு" ! செய்வோமா?
செய்முறை:
முதலில் மில்க் பிஸ்கட்களை,ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடித்துகொண்டு அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் பாதாம், பிஸ்தா, முந்திரி, வால் நட் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு, மிக்சி ஜாரில் போட்டு, கொரகொரவென பொடித்துக் கொண்டு, அதனை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் பௌலில் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் பௌலில் கன்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக மீண்டும் கட்டி இல்லாமல் செய்து கொள்ள வேண்டும்.
சாஃப்டாக பிசைந்து கொள்ள வேண்டும்.
சுமார் அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணி நேரத்திற்கு பிறகு, பிசைந்த கலவையினை, கொஞ்சம் கையில் எடுத்து , சிறிய லெமன் சைஸ் உருண்டைகளாக எடுத்து உருட்டி கொண்டு, அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு சில உருண்டைகளை பொடித்து எடுத்து வைத்துள்ள நட்ஸ்களுடன் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க மிக சிம்பிளாக, டேஸ்டான சாக்லேட் பிஸ்கட் பால்ஸ் ரெடி.