வாருங்கள்! சுவையான உருளைக்கிழங்கு பால் கறி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உருளைக்கிழங்கு வைத்து மசாலா, ஃப்ரை, குருமா என்று பல்வேறு விதங்களில் சமைத்து சாப்பிட்டு இருப்போம். இதனையே செய்து அலுத்து போனவர்கள் இப்படி ஒரு முறை கல்யாண வீட்டு ஸ்டைலில் உருளைக்கிழங்கு பால் கறி வைத்து கொடுங்க. இதன் சுவை மிகவும் கலக்கலாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக காரக் குழம்பிற்கு வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.
வாருங்கள்! சுவையான உருளைக்கிழங்கு பால் கறி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
தேங்காய் துருவல் - 1/2 கப்
சிறிய வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணைய் -தேவையான அளவு
தாளிப்பதற்கு:
கடுகு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
மறந்தும் கண்ணாடியை வீட்டில் இந்த இடங்களில் வைக்காதீர்கள். பிறகு வீண் பிரச்னை தான் எழும்.
செய்முறை:
அடுப்பில் ஒரு குக்கர் வைத்து உருளைக்கிழங்கு சேர்த்து தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்து வேக வைத்து பின் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். விசில் அடங்கிய பின் குக்கரை திறந்து உருளைக்கிழங்கின் தோலினை எடுத்து விட்டு நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய் ,சீரகம் ,சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவை சேர்த்து பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, அதில் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும். இப்போது அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். இறுதியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் சுவையான உருளைக்கிழங்கு பால் கறி ரெடி!