ஒரு முறை இட்லி,தோசைக்கு செட்டிநாடு ஸ்டைலில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்து அசத்துங்க!

By Asianet TamilFirst Published Mar 24, 2023, 10:28 AM IST
Highlights

வாருங்கள்! காரசாரமான செட்டிநாடு பச்சை மிளகாய் சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் கொள்ளலாம்.

தினமும் நாம் காலை உணவாக சாப்பிடும் இட்லி, தோசை போன்ற வற்றிற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என்று செய்ததே செய்து அலுத்து விட்டதா?

இதனை தவிர வேறு ஏதாவது சட்னியை செய்து தருமாறு வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் இந்த காரைக்குடி பச்சை மிளகாய் சட்னியை செய்து கொடுங்கள். பின் இதனையே அடிக்கடி செய்து தருமாறு வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் அளவிற்கு அதன் சுவை அபாரமாக இருக்கும். காரைக்குடி ஸ்டைலின் சிறப்பே அதன் ருசியுடன் கூடிய மணமும் , காரசாரமும் தான் .

வாருங்கள்! காரசாரமான செட்டிநாடு பச்சை மிளகாய் சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் கொள்ளலாம்.

தேவையானபொருட்கள்:

 பச்சை மிளகாய்-8
சின்ன வெங்காயம்- 10
துருவிய தேங்காய்- 1/4 கப்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1 ஸ்பூன்
வெல்லம் -1/ 2 ஸ்பூன்
 சீரகம்- 1/2 ஸ்பூன்
பூண்டு- 10 பற்கள்
இஞ்சி- 1 இன்ச்
 பெருங்காயத் தூள்- 1/2 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
எண்ணெய் -தேவையான அளவு

தாளிப்பதற்கு:

கடுகு-1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
உளுந்தம் பருப்பு- 1/2 ஸ்பூன்
வர மிளகாய்- 2

உடம்பிலுள்ள கொழுப்பை கரைத்து உடம்பை சிக்கென வைக்க சித்தர்கள் பின்பற்றிய வீட்டு மருத்துவம்!

செய்முறை:

முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொண்டு ஒன்றுக்கு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக அதில் சீரகம் சேர்த்து வதக்கி விட்டு, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன் பச்சை வாசனை சென்ற பிறகு, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விட்டு, துருவிய தேங்காய் மற்றும் மல்லித்தழையை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு கலவையை ஆற வைக்க வேண்டும், பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிது உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய்ஊற்றி எண்ணெய் சூடான பின் அதில் , கடுகு,உளுந்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிளறிவிட்டால் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி ரெடி!

click me!