சிலோன் பரோட்டாவுக்கு சூப்பர் சைடிஷ் ''சிலோன் சிக்கன் ப்ரை'' செய்வோமா?

By Dinesh TG  |  First Published Oct 31, 2022, 12:18 AM IST

சிலோன் ஸ்டைலில் சமைக்கும் சிலோன் சிக்கன் ப்ரை எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 
 


அசைவ பிரியர்களில் பெரும்பாலானோருக்கு சிக்கன் தான் பேவரைட் .சிக்கன் வைத்து சிக்கன் 65, சிக்கன் சுக்கா, சிக்கன் குழம்பு, சிக்கன்பிரியாணி என்று பல வகையான ரெசிபிஸ் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். 

ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விதமான சமையல் முறையை பின்பற்றும் பழக்கம் இருந்து வருகிறது.அந்த வகையில் நாம் சிலோன் ஸ்டைலில் சமைக்கும் சிலோன் சிக்கன் ப்ரை எப்படி செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ
முட்டை - 4
வெங்காயம் - 200 கிராம் 
தக்காளி - 4
காய்ந்த மிளகாய் - 8
மிளகு - 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
தனியா விதை - 2 ஸ்பூன் 
இஞ்சி - 1 இன்ச் 
பூண்டு - 2 பற்கள் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு 

சர்க்கரை நோயினை விரட்ட , ஆரோக்கியமான "ஓட்ஸ் வெஜ் ஊத்தப்பம்"!

செய்முறை:

கோழிக்கறியை தோல் நீக்கி சுத்தம் செய்து அலசிய பின் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் சேர்க்காமல், மிளகு, சீரகம் , தனியா மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக் கொண்டு, அதனை மிக்சி ஜாரில் போட்டு பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே மிக்சி ஜாரில் இஞ்சி,மற்றும் பூண்டினையும் அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் கோழித் துண்டுகளை போட்டு, அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பவுடரை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். பின் தனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள்,பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கொண்டு நன்றாக பிரட்டி விட வேண்டும்.பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வைத்து வேக விட வேண்டும். 

கோழிக்கறியில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரையில் வேக வைத்துக் கொண்டு, அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, பாத்திரத்தை இறக்கி,ஆறிய பின்பு கறித்துண்டுகளில் இருக்கின்ற எலும்புகளை எடுத்து விட வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி , நன்கு அடித்து மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து பொரியல் செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்த பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் வேக வைத்து எடுத்துள்ள கோழிக்கறி துண்டுகளைப் போட்டு சுமார் 8-10 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும். பின் அதனுடன் முட்டை பொரியலையும் சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க சுவையான சிலோன் சிக்கன் ப்ரை ரெடி!!!

click me!