நாம் சிதம்பரம் ஸ்டைலில் மண மணக்கும் கத்திரிக்காயை வைத்து சுவையான பொரியல் செய்யலாம் வாங்க.
நம் தமிழ் நாட்டில் பல விதமான உணவு முறைகள் பின்பற்ற படுகின்றன. உதாரணமாக செட்டிநாடு, கொங்கு நாடு, மதுரை மற்றும் நெல்லை உணவு என்று பல வகையான உணவு முறைகள் உள்ளன. ஒவ்வொரு உணவு முறையும் ஒவ்வொரு வகையில் சமைக்கப்டுகின்றன.அந்த வகையில் இன்று நாம் சிதம்பரம் ஸ்டைலில் மண மணக்கும் கத்திரிக்காயை வைத்து சுவையான பொரியல் செய்யலாம் வாங்க.
பொதுவாக நாம் கத்திரிக்காய் வைத்து சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் , கத்திரிக்காய் மிளகு வறுவல் என்று சமைத்து சுவைத்து இருப்போம். இந்த முறை கத்தரிக்காய் வைத்து சற்று வித்தியாசமாக சிதம்பரம் ஸ்டைலில் பொரியல் செய்யலாம் .இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனை எவ்வாறு செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
கிராமத்து மண் வாசனையுடன் மண் சட்டியில் கோழிக்கறி குழம்பு!
பொடி அரைப்பதற்கு :
எண்ணெய் - 1 ஸ்பூன்
மல்லி விதை- 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
கருவேப்பிலை -1 கொத்து
பொரியல் செய்வதற்கு :
கத்தரிக்காய் -4
சின்ன வெங்காயம்- 1 பொடியாக நறுக்கியது
புளி கரைசல் - 1/4 கப்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்த பருப்பு - 1/2 ஸ்பூன்
மிளகு -1/2 ஸ்பூன்
கருவேப்பிலை- ஒரு கொத்து
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் கத்திரிக்காயை நன்கு கழுவி கொண்டு , பின் அதனை நான்கு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். அடுப்பில் குக்கர் வைத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 2 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவையான சுரைக்காய் போளி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கலாம் வாங்க!
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான் பின் அதில் மல்லிவிதை,காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.
மல்லி மற்றும் மிளகாய் நன்றாக வறுபட்டதும்,அதனை ஆற வைத்து விட்டு, ஒரு மிக்ஸி ஜாரில்போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து நாம் குக்கரில் வேகவைத்த கத்திரிக்காயை எடுத்து ஒரு கரண்டியால் நன்கு மசித்து விட வேண்டும்.
இப்போது கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்த உடன் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும் .பின் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு,அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதில் மசித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறி விட வேண்டும்.
இப்போது நாம் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும், உப்பையும் சேர்த்து சுமார் ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். சுவையான சிதம்பரம் கத்திரிக்காய் பொரியல் ரெடி!