வாருங்கள்! சத்தான வாழைப்பூ துவையலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காய்கறிகளுள் பல விதங்கள் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான மருத்துவ பயனையும்,சுவையையும் தருகின்றன. அந்த வகையில் நார்சத்து அதிகமுள்ள காய்கறிகளில் ஒன்றான வாழைப்பூவினை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மூலநோய், இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் விரைவில் குணமாகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை பிரச்சனைகளை சரி செய்யவும் இதனை சாப்பிடலாம்.
வாழைப்பூவானது மலச்சிக்கலுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. இதனை தவிர வாய்ப்புண்,அஜீரணம் போன்றவைகளுக்கு சிறந்த தீர்வை தருகிறது. இத்தனை ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பூ வைத்து சூப்பரான ரெசிபியை காணலாம்.
வாருங்கள்! சத்தான வாழைப்பூ துவையலை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
சுள்ளுனு ஆளை இழுக்கும் ஸ்பைசியான "நண்டு குருமா"!
செய்முறை:
முதலில் வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை எடுத்து விட்டு நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தம் செய்த வாழைப்பூவினை வெட்டி வைத்து மோர் கலந்த தண்ணீரில் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.அடுப்பில் 1 வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அதில் சிறிது உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, புளி, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஒரே பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு அதனை ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதே வாணலியில் மோரில் உள்ள வாழைப்பூவை வடிகட்டி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் ஆற வைத்துள்ள வதக்கிய பருப்பு மற்றும் மிளகாய் கலவையை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்தாக அதில் தேங்காயை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக வதக்கி வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து அதில் சிறிது உப்பும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, கடுகு பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
தாளித்ததை அரைத்த துவையலில் சேர்த்து கிளறி விட்டு பரிமாறினால் சுவையான சத்தான வாழைப்பூ துவையல் ரெடி!