குட்டீஸுக்கு புடிச்ச பால் பணியாரம் பத்தே நிமிஷத்தில் ரெடி.. ரெசிபி இதோ!!

By Kalai Selvi  |  First Published Sep 2, 2024, 5:26 PM IST

Paal Paniyaram Recipe : ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பால் பணியாரம் செய்து கொடுங்கள் ரெசிபி உள்ளே.


பால் பணியாரம் என்பது குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். குறிப்பாக, ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகள், ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக ஏதாவது சாப்பிட கேட்டால், ஒரு முறை இந்த பால் பணியாரம் செய்து கொடுங்கள். மகிழ்ச்சியுடன் அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் அவர்களது வயிறும் நிறையும். முக்கியமாக, இது ஆரோக்கியமானதும் கூட. இந்த பால் பணியாரம் செய்ய அதிக நேரம் இருக்காது, சுலபமான முறையில் செய்து விடலாம். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், டேஸ்டான பால் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க: உங்க வீட்டுல பீட்ரூட் இருக்கா..?! டேஸ்டான டிபன் செய்யலாம் வாங்க.. ரெசிபி இதோ!

Tap to resize

Latest Videos

undefined

பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
தேங்காய் பால் - 1 கிளாஸ் (கெட்டியானது)
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி , பாதாம்  - சிறிதளவு (விரும்பினால்)

இதையும் படிங்க:  1 கப் ராகி மாவு போதும்.. சுவையான மற்றும் சத்தான ஸ்வீட் ரெடி.. ரெசிபி இதோ!

செய்முறை :

பால் பணியாரம் செய்ய முதலில், அரிசி மற்றும் உளுந்தை நன்கு கழுவி, பிறகு அதை சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைக்கும் போது இதனுடன் உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, அரைக்கும் மாவு கெட்டியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மறுபுறம், ஒரு பாத்திரத்தில் பாலை தண்ணி விடாமல் நன்கு காய்ச்சி, எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பால் நன்கு ஆறியதும் அதில் ஏற்கனவே எடுத்து வைத்த தேங்காய் பால் சர்க்கரை, ஏலக்காய் தூள்,முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாரித்து வைத்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நன்கு பொறித்தெடுக்கவும். பிறகு, அதனை பாலில் போட்டு பத்து நிமிடம் கழித்து சாப்பிடவும். அவ்வளவுதான் டேஸ்ட்டான பால் பணியாரம் ரெடி.

முக்கிய குறிப்பு : மாவானது புளித்திருக்கக் கூடாது. அரைத்த சில மணி நேரத்தில் அதை பொரித்து பாலில் போட்டு ஊற வைக்கவும். அதுபோல, பணியாரம் பாலில் அதிக நேரமும் ஊறிவிடக்கூடாது, பாலில் போட்டோ 10 நிமிடங்கள் கழித்து சாப்பிட்டு விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!