
அரிசி உணவில் மட்டுமல்ல அழகுப் பராமரிப்பிலும் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது அரிசி மாவை ஃபேஸ் பேக் (Face Pack), ஸ்க்ரப் (Scrub) மற்றும் கிளென்சர் (Cleanser) ஆகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் முகம் எப்போதுமே பளபளப்பாகவே இருக்கும். கருப்பு புள்ளிகளும் மறையும்.
அரிசி மாவு சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தந்தாலும் அதை தவறாக பயன்படுத்தினாலோ அல்லது அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினாலும் அது சருமத்திற்கு மோசமான தீங்கை தான் விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பதிவில் அரிசி மாவை முகத்திற்கு பயன்படுத்துவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்.
முகத்திற்கு அரிசி மாவை பயன்படுத்துவதன் பக்கவிளைவுகள்
1. சருமம் வறட்சியாகும் :
அரிசி மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படும் என்றாலும், அதை அதை அடிக்கடி முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்திலிருக்கும் இயற்கையான ஈரப்பதம் முற்றிலும் அழிந்துவிடும். இதனால் சருமம் வறண்டு போய்விடும். ஆகவே வறண்ட சருமம் உள்ளவர்கள், அரிசி மாவை பயன்படுத்த விரும்பினால் அதனுடன் தேன், பால் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்துக்கொள்ளுங்கள்.
2. தடிப்புகள் அல்லது ஒவ்வாமை :
சிலருக்கு அரிசி மாவு சருமத்தில் அரிப்பு, சிவத்தல், தடிப்பு போன்ற ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் அரிசி மாவை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
3. தோல் நிறத்தில் மாற்றங்கள் ;
அரிசி மாவு முகத்தில் அதிகமாகப் பயன்படுத்தினால், அது சருமத்தின் மேலடுக்கை சேதமாக்கி, சருமத்தின் இயற்கையான நிறத்தை மாறிவிடும். குறிப்பாக அரிசி மாவில் அடிக்கடி ஸ்க்ரப் செய்வதால் முகம் சீராக இருக்காது.
4. முகப்பரு பிரச்சனை:
முகத்தில் அரிசி மாவை பயன்படுத்திய பிறகு சருமம் ஒழுங்காக சுத்தம் செய்யப்படாவிட்டால், துளைகள் ஏற்படும். இதன் விளைவாக முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் தோன்றும் அபாயம் உள்ளது.
5. முன்கூட்டிய வயதான அறிகுறிகள்
அரிசி மாவை அடிக்கடி முகத்தில் பயன்படுத்தினால் சருத்தில் வறட்சி ஏற்பட்டு, சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் சீக்கிரமாகவே தோன்றும். இதனால் இளம் வயதிலேயே முகத்தில் வயதான தோற்றம் தெரியும்.
நினைவில் கொள் :
- அரிசி மாவை பயன்படுத்த விரும்பினால் வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- வறண்ட சருமம் உள்ளவர்கள் அரிசி மாவை நேரடியாக முகத்தில் பயன்படுத்தாமல், ஈரப்பதம் தரும் பொருட்களுடன் கலந்து பயன்படுத்துங்கள்.
- அரிசி மாவை பயன்படுத்திய பிறகு முகத்தை நன்கு சுத்தம் செய்த பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.
- அரிசி மாவு பயன்படுத்திய பிறகு சருமத்தில் ஒவ்வாமை, சிவத்தல், அரிப்பு போன்றவை ஏற்பட்டால் உடனே அதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுக வேண்டும்
குறிப்பு :
நீங்கள் அரிசி மாவைப் பயன்படுத்த விரும்பினால், அதை அளவோடும் மற்றும் சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நல்ல பலனை தரும்.