Eyelashes : கண் இமையில் முடிகள் இல்லையா? இந்த 7 உணவுகள் சேருங்க! இயற்கையா வளரும்

Published : Sep 01, 2025, 03:58 PM IST
Eyelashes

சுருக்கம்

இந்த பதிவில் நீண்ட அடர்த்தியான கண் இமைகளை பெற எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கண்களை அழகாக காட்டுவது இமைகளில் இருக்கும் முடிகள் தான். மேலும் கண் இமைகள் கண்களின் அழகை அதிகரிப்பது மட்டுமில்லாமல் தூசி, மாசுக்களில் இருந்து கண்களை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் செயல்படும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே கண் இமைகள் அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும். அப்படி கண் இமைகள் இல்லாதவர்கள் செயற்கை கண் இமைகள், மஸ்காரா, சீரும் போன்றவற்றை பயன்படுத்துகின்றன. ஆனால் அவை கண்களின் ஆரோக்கியத்தை தான் பாதிக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், கண் இமைகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியானது நாம் சாப்பிடும் உணவுடன் நேரடி தொடர்புடையது என்று உங்களுக்கு தெரியுமா? உண்மையை சொல்ல போனால் பலருக்கும் இது தெரிவதில்லை. நாம் போதுமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளாவிட்டால் தலைமுடி வளர்ச்சி பாதிக்கப்படும். அது போல தான் கண் இமைகள் முடியும். எனவே நீளமான, அடர்த்தியான கண் இமைகளை நீங்கள் பெற விரும்பினால் உங்களது உணவை செல்ல மாற்றங்களை செய்வது மிகவும் அவசியம். இந்த பதிவில் அடர்த்தியான கண் இமைகள் பெற எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

கண் இமைகள் அடர்த்தியாக சாப்பிட வேண்டிய உணவுகள் :

1. புரதம்

முட்டை, பருப்பு, பயறு வகைகள், சிக்கன், மீன், பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் உற்பத்திக்கு பெரிது உதவும்.

2. பயோட்டின்

வைட்டமின் பி 7 என்று அழைக்கப்படும் இது முடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். வால்நட், பாதாம், ஓட்ஸ், காலிஃபிளவர், முட்டை போன்றவற்றில் பயோட்டின் நிறைந்துள்ளன.

3. இரும்புச்சத்து

முடி உதிர்தலுக்கு இரும்புச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகும் இதனால் கண் இமைகளும் பாதிக்கப்படலாம். எனவே கீரை, ப்ரோக்கோலி, பருப்பு வகைகள், சிவப்பு அரிசி போன்றவற்றை சாப்பிடுங்கள். அவற்றில் இரும்புச்சத்து உள்ளதால், அவை முடி உதிர்வை தடுக்கும்.

4. வைட்டமின் சி

கொலாஜன் உற்பத்திக்கு மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து இதுவாகும். கொலாஜன் தான் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியம். ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, குடைமிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன.

5. வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ தான் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. பாதாம், சூரியகாந்தி விதைகள், அவகேடோ போன்றவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. அதுபோல வைட்டமின் ஏ-யும் செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே உங்களது உணவில் கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, பூசணி போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

6. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

முடியின் வேர்களை வலுப்படுத்த ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது. மேலும் வறண்ட சருமத்தை குறைக்கவும் இது உதவும். வால்நட், சால்மன், சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவே உள்ளன.

7. துத்தநாகம்

முடி வளர்ச்சியை தூண்ட இது பெரிதும் உதவுகிறது. பயிர் வகைகள், பூசணி விதைகள் போன்றவற்றில் இது அதிகமாகவே உள்ளன. அதுபோல செலினியமும் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

நீளமான, அடர்த்தியான கண் இமைகளை பெற விரும்பினால் இந்த உணவுகளை உங்களது தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாகவே இமைகள் அழகாக வளரும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க