செயலிழந்த செயற்கைக்கோள்கள் விண்வெளியில் குப்பைகளாகத் தங்காமல் மீண்டும் பூமிக்குத் திரும்ப வேண்டும். வழக்கமான உலோக செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமியின் வளிமண்டலத்துக்குள் வரும்போது அலுமினிய ஆக்சைடு துகள்களை உருவாக்குகின்றன. ஆனால் மரத்தாலான செயற்கைக்கோள்கள் எரிந்துவிடும் என்பதால் குறைந்த மாசுபாடுதான் ஏற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
"மர செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், உலோக செயற்கைக்கோள்கள் எதிர்காலத்தில் தடைசெய்யப்படலாம்" என்று விஞ்ஞானி டோய் கூறுகிறார். "எங்கள் முதல் மர செயற்கைக்கோள் திட்டம் வெற்றி அடைந்தால், அதை எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க விரும்புகிறோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.