உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா (Wikipedia) தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்த மைல்கல் பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. AI காலத்தில் அதன் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியா (Wikipedia), இன்று (வியாழக்கிழமை, ஜனவரி 15, 2026) தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. கடந்த கால் நூற்றாண்டாக, மனிதர்களால் உருவாக்கப்பட்ட நம்பகமான அறிவை உலகம் முழுவதும் இலவசமாகக் கொண்டு சேர்த்த பெருமையுடன் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
26
டிஜிட்டல் உலக அதிசயம்
விக்கிமீடியா அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி மரியானா இஸ்காண்டர் கூறுகையில், "விக்கிப்பீடியா என்பது உலகின் ஒரு டிஜிட்டல் அதிசயம். பல சவால்களைக் கடந்து, இலவச மற்றும் நம்பகமான அறிவைப் பகிரும் மக்களின் உறுதியான அர்ப்பணிப்பால் இது சாத்தியமானது. இன்று இணையத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பிலும் விக்கிப்பீடியா ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளது," எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
36
இந்தியாவிற்குப் பெருமை!
விக்கிப்பீடியாவின் 25-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதன் தன்னார்வத் தொண்டர்களின் கதைகளை விளக்கும் 'ஆவணத் தொடர்' (Docuseries) வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 8 தன்னார்வலர்களில், இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் நேதா உசேன் (Dr. Netha Hussain) முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.
கொரோனா பேரிடர் காலத்தில், மருத்துவ ரீதியாகச் சரியான தகவல்களை விக்கிப்பீடியா மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக டாக்டர் நேதா உசேன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
விக்கிப்பீடியாவைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா உலகில் 5-வது இடத்தில் உள்ளது (மாதம் 80 கோடி பார்வைகள்). மேலும், ஆங்கில விக்கிப்பீடியாவிற்கு அதிகத் தகவல்களை வழங்கும் நாடுகளில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உட்பட, மொத்தம் 25-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் விக்கிப்பீடியா கிடைக்கிறது.
56
பிறந்தநாள் சிறப்புத் திட்டங்கள்
இந்த விழாவைக் கொண்டாட விக்கிமீடியா அறக்கட்டளை பல சுவாரசியமான விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது:
• டிஜிட்டல் பிறந்தநாள் அட்டை: பயனர்கள் அனைவரும் விக்கிப்பீடியாவின் டிஜிட்டல் பிறந்தநாள் அட்டையில் கையெழுத்திடலாம். இது உலகின் மிக நீளமான பிறந்தநாள் அட்டையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
• நேரலை நிகழ்ச்சி: இன்று மாலை (UTC நேரப்படி 4:00 மணி) விக்கிப்பீடியாவின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரலை கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
• பேபி குளோப் (Baby Globe): விக்கிப்பீடியாவின் புதிய அடையாளச் சின்னமாக 'பேபி குளோப்' என்ற பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 'Birthday Mode'-ஐ ஆன் செய்வதன் மூலம் இணையதளத்தில் பல மாற்றங்களைக் காணலாம்.
66
AI காலத்தில் விக்கிபீடியாவின் முக்கியத்துவம்
செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ந்து வரும் இன்றைய சூழலில், விக்கிப்பீடியாவின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. சாட்போட்கள் (Chatbots) மற்றும் தேடுபொறிகள் (Search Engines) துல்லியமான தகவல்களை வழங்க விக்கிப்பீடியாவின் தரவுகளையே பெரிதும் நம்பியுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் 6.5 கோடி கட்டுரைகளைக் கொண்டுள்ள விக்கிப்பீடியா, இன்றும் ஒரு லாப நோக்கற்ற அமைப்பால் நடத்தப்படுவது அதன் தனிச்சிறப்பாகும்.
"AI காலத்திலும் அறிவு என்பது மனிதர்களால் உருவாக்கப்பட வேண்டும்; அதற்கு மனிதர்களின் பங்களிப்பு அவசியம்" என்பதை இந்த 25 ஆண்டு காலப் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது.