வெளிநாடு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அமெரிக்கா, லண்டன் என்றிருந்த நிலை மாறி துபாய் முதலிடம் பிடித்து வருகிறது. இந்திய பணக்காரர்களின் முதல் மற்றும் முக்கியத் தேர்வாக துபாய், ஐக்கிய அமிரகம் உள்ளது. Forbes-ன் 2024ம் ஆண்டுக்கான முக்கிய நகரங்கள் பட்டியலில் நியூயார்க், மியாமி மற்றும் பாரிஸ் போன்ற நகரங்களை முந்தி, டிராவலர்களுக்கு பிடித்த இடமாக துபாய் மாறியுள்ளது. ஹென்லி & பார்ட்னர்ஸின் அறிக்கையின் படி ஐக்கிய 4 ஆயிரத்து 300 மில்லியனர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.