ஜக்மீத் சிங்கின் அரசியல் பயணம்: வெற்றி முதல் வீழ்ச்சி வரை

Published : Apr 30, 2025, 10:22 AM IST

2025 கனடா தேர்தலில் ஜக்மீத் சிங் தலைமையிலான NDP தோல்வியடைந்தது. தனது தொகுதியில் தோல்வியடைந்த சிங், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். சீக்கியர் சமூகத்தின் முக்கிய அரசியல் பிரமுகரான சிங்கின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

PREV
14
ஜக்மீத் சிங்கின் அரசியல் பயணம்: வெற்றி முதல் வீழ்ச்சி வரை
Jagmeet Singh in Canada Elections

கனடா தேர்தலில் ஜக்மீத் சிங்:

2025 கனடா தேர்தல் முடிவடைந்த நிலையில், புதிய ஜனநாயகக் கட்சிக்கு (NDP) இது ஒரு முக்கியத் திருப்பமாக அமைத்துள்ளது. மூன்று தேர்தல்களில் தேசிய ஜனநாயக் கட்சியை வழிநடத்திய ஜக்மீத் சிங், பர்னாபி சென்ட்ரல் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்தத் தோல்வியின் எதிரொலியாக கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.

கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றை வழிநடத்திய முதல் சீக்கியரான ஜக்மீத் சிங், தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுக்குப் பிறகு கண்ணீர் மல்க பேசிய ஜக்மீத் சிங் அரசியல் வாழ்க்கையில் தனது தனிப்பட்ட தியாகங்களை நினைவுகூர்ந்தார்.

24
Jagmeet Singh

ஆரம்ப காலம்:

பஞ்சாபி புலம்பெயர்ந்த பெற்றோர்களுக்கு ஒன்டாரியோவின் ஸ்கார்பரோவில் பிறந்த சிங், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் வின்ட்சரில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். தாலிவால் ஜாட் குலத்தைச் சேர்ந்த சீக்கியரான அவர், சிறிது காலம் இந்தியாவில் வாழ்ந்தார். தனது குழந்தை பருவத்தில் சந்தித்த துஷ்பிரயோகம் மற்றும் தனது தந்தையின் குடிப்பழக்கம் போன்ற தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவரது சகோதரர் குர்ரட்டன் சிங், ஒன்டாரியோ சட்டமன்ற உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.

34
Jagmeet Singh

கல்வி மற்றும் தொழில்:

சிங் வெஸ்டர்ன் ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டமும், ஒஸ்கூட் ஹாலில் சட்டப் பட்டமும் பெற்றார். 2006-ல் ஒன்டாரியோ வழக்கறிஞர் சங்கத்தில் உறுப்பினரானார். 2011-ல் அரசியலில் நுழைவதற்கு முன்பு, குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2017-ல் NDP தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். இருப்பினும், காலிஸ்தான் பிரிவினைவாதத்திற்கு மறைமுக ஆதரவு அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அவரது தலைமைக்குக் களங்கம் விளைவித்தன - அவர் தொடர்ந்து அவற்றை மறுத்தார்.

44
Jagmeet Singh

மனைவி மற்றும் குடும்பம்:

2018-ல், டொராண்டோவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும், ஜாங்கியோ என்ற பஞ்சாபி ஆடை நிறுவனத்தின் இணை நிறுவனருமான குர்கிரன் கவுர் சித்துவை சிங் மணந்தார். பாரம்பரிய தெற்காசிய ஆடைகளுக்கு நவீன வடிவம் கொடுப்பதில் புகழ்பெற்ற சித்து, பஞ்சாபி புலம்பெயர்ந்தோரிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார். அவர் தனது தனித்துவமான பாணியால் அறியப்படுகிறார். சமூகப் பணிகளிலும், ஆதரவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, சிங்குடன் பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்கிறார்.

இந்த தம்பதியினருக்கு 2022-ல் அன்ஹாத் என்ற மகளும், 2023-ன் இறுதியில் பிறந்த மற்றொரு குழந்தையும் உள்ளனர். அவர்கள் பிராம்ப்டனில் வசிக்கின்றனர். தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, NDP-ஐ வழிநடத்தியதும், நாடாளுமன்றத்தில் தனது சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியதும், “என் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமை” என்று சிங் கூறினார்.

Read more Photos on
click me!

Recommended Stories