இந்தியாவின் தண்ணீரை சீனாவால் தடுக்க முடியுமா?
பாகிஸ்தான், இந்தியா இடையேயான மோதல் என்பது வேறு. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். முதல் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியா சீனாவிற்குள் பயங்கரவாதத்தைப் பரப்புவதில்லை, மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் பொதுவாக பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுகின்றன. உதாரணமாக கால்வான் மோதலுக்குப் பிறகு செய்யப்பட்டது போல பிரச்சனை பேசி தீர்க்கப்படும்.
பாகிஸ்தானை போல் சீனா இல்லை
சீனாவிற்குள் பிரிவினைவாத இயக்கங்களையோ அல்லது உள்நாட்டு வன்முறையையோ தூண்ட இந்தியா முயற்சிக்கவில்லை. எனவே, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கொண்டிருக்கக்கூடிய பகைமை சீனாவிடம் இல்லை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் எல்லைப் பிரச்சினைகள் பற்றியது, அவை நிச்சயமாக ஆபத்தான முறையில் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன. ஆனால் சீனாவிற்கு பாகிஸ்தானைப் போன்ற காரணங்கள் எதுவும் இல்லை.