பூமி எப்போது அழியும்.? இறுதி நாள் எப்போது.? விஞ்ஞானிகள் புதிய கணிப்பு- வெளியான அதிர்ச்சி தகவல்

Published : Oct 23, 2025, 11:09 AM IST

நாசா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகளின் சூப்பர் கம்ப்யூட்டர் கணிப்பின்படி சூரியனின் வெப்பம் அதிகரித்து பூமி உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக மாறும். சூரியன் ஒரு 'சிவப்பு ராட்சசன்' ஆக மாறி பூமியை அழித்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

PREV
14

பூமி சூரியக் குடும்பத்தில் உள்ள மூன்றாவது கிரகமாகும், இது உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கிரகமாக அறியப்படுகிறது. இது நீர், நிலம், காற்று மற்றும் உயிரினங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான கிரகமாகும். இந்த கிரகம் அழியப்போகிறது என்றால் நம்பவா முடிகிறது.

 Armageddon, The Day After Tomorrow, 2012, Interstellar போன்ற ஆங்கில படங்களில் பூமி அழிவது போல் காட்டி பல ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது போன்ற படங்களை பார்ப்பதற்காகவே சினிமா ரசிகர்கள் உள்ளனர். இதுவே  பூமி உண்மையிலேயே அழியப்போகிறது என்றால் நம்பவா முடிகிறது. ஆனால் இது உண்மை தான். அந்த அளவிற்கு ஷாக் கொடுக்கும் தகவலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

24

நாசா மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் கணக்கிட்டுள்ளனர். சூரியன் படிப்படியாக வெப்பமடைவதால், பூமியில் உயிர்கள் வாழும் சூழல் எதிர்காலத்தில் மாறும் என தெரிவித்துள்ளனர். சூரிய வெப்பத்தால் பூமி சூடாகும். கடல்கள் ஆவியாகி, ஆக்ஸிஜன் குறையும். பூமி வறண்ட பாறையாக மாறும். வெப்பநிலை 100°C வரை உயர வாய்ப்புள்ளது. இதில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

34

நாசாவின் கணக்குப்படி, சுமார் 100 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் உயிரினங்கள் வாழ்வது கடினம். அப்போது சூரியன் மிகவும் வெப்பமாகி, பூமியின் வெப்பநிலை தாங்க முடியாத அளவுக்கு உயரும். சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் "சிவப்பு ராட்சசன்" ஆக மாறும். அப்போது பூமி எரிந்துவிடலாம் அல்லது சூரியனுடன் கலந்துவிடலாம். இதுவே பூமியின் இறுதி நாளாக அமையும் என கணித்துள்ளனர்.

பூமியில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

  •  சூரியனின் வெப்பத்தால் பூமி மிகவும் வெப்பமடைகிறது.
  • கடல்கள் படிப்படியாக ஆவியாகி வருகின்றன, நீர் குறைந்து வருகிறது.
  • காற்றில் ஆக்ஸிஜன் அளவும் குறைகிறது.
  • பூமி வறண்டு, காய்ந்த பாறையைப் போல வறண்டு போகிறது.

* பூமியில் வெப்பநிலை 100°C ஆக உயர வாய்ப்புள்ளது. இதுபோன்ற நிலைமைகளின் கீழ் எந்த உயிரினமும் நீண்ட காலம் உயிர்வாழவில்லை

44

இது எதிர்காலத்தில் நடந்தாலும், நாசாவின் இந்தக் கணக்கீடுகள் நமக்கு ஒரு எச்சரிக்கை. இப்போதே மாசுபாட்டைக் குறைக்காவிட்டால், காலநிலை மாற்றத்தால் பூமியின் நிலை இன்னும் வேகமாக மோசமடையும் வெகு விரைவில் இல்லை. எனவே மரம் நட்டு, நீரை சேமித்து, மாசுபாட்டை குறைத்து இயற்கையை காக்க வேண்டும். அப்போது தான் நமது எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான மற்றும் பசுமையான பூமியை ஒப்படைக்க முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories