ஜப்பானில் முதல் பெண் பிரதமரான சனே டகாயிச்சி! டிரம்ப் குடைச்சலை சமாளிப்பாரா?

Published : Oct 21, 2025, 03:00 PM IST

ச டகாயிச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராக கூட்டணி அமைத்து பதவியேற்றுள்ளார். மந்தமான பொருளாதாரம், மக்கள் தொகை வீழ்ச்சி மற்றும் அமெரிக்காவின் அழுத்தம் போன்ற பல சவால்களை அவர் எதிர்கொள்கிறார்.

PREV
15
ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே டகாயிச்சி

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாயிச்சி தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ளார். சீனக் கொள்கைகளின் கடுமையான எதிர்ப்பாளருமான டகாயிச்சி, கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்ததன் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

சனே டகாயிச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜப்பானின் ஐந்தாவது பிரதமராகத் தேர்வாகியுள்ளார். மைனாரிட்டி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் இவருக்கு அடுத்த வாரம் நிகழவுள்ள அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப்பின் வருகை உட்பட பல சவால்கள் காத்திருக்கின்றன.

25
ஜப்பானில் அரசியல் மாற்றம்

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரைப் பின்பற்றும் சனே டகாயிச்சி சுற்று வாக்கெடுப்பிலேயே பெரும்பான்மையைப் பெற்றதை அடுத்து, பாராளுமன்றத்தால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், பேரரசரைச் சந்தித்து முறைப்படி பதவியேற்பார்.

64 வயதான டகாயிச்சி முன்னாள் ஹெவி மெட்டல் டிரம்ஸ் கலைஞர். கடந்த அக்டோபர் 4ஆம் தேதி லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (LDP) தலைவரானார். பல தசாப்தங்களாக ஆட்சி செய்து வந்த LDP, சமீப காலமாக ஆதரவை இழந்து வருகிறது.

LDP-யின் நிதி முறைகேடு காரணமாகக் கோமெய்டோ கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. இதையடுத்து, டகாயிச்சி வலதுசாரி கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் (JIP) கூட்டணியை உருவாக்கினார்.

35
புதிய கூட்டணியின் கொள்கைகள்

ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (JIP) உணவுப் பொருட்களுக்கான நுகர்வோர் வரி விகிதத்தை பூஜ்ஜியமாகக் குறைக்கவும், கார்ப்பரேட் மற்றும் நிறுவன நன்கொடைகளை ஒழிக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் விரும்புகிறது.

ஜப்பானின் பொருளாதாரத்தை வலிமையாக்குவதாகவும், எதிர்கால சந்ததியினருக்குப் பொறுப்பேற்கும் நாடாக ஜப்பானை மறுவடிவமைப்பு செய்யவும் டகாயிச்சி உறுதியளித்துள்ளார்.

45
பெண்கள் பிரதிநிதித்துவம்

நாட்டின் பாலின இடைவெளிக் குறியீட்டில் (2025 உலகப் பொருளாதார மன்ற அறிக்கை) ஜப்பான் 148 நாடுகளில் 118வது இடத்தில் உள்ளது. கீழ்சபை உறுப்பினர்களில் சுமார் 15 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்.

முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அமைச்சரவையில் இருந்த இரண்டு பெண்களை விட, தனது அமைச்சரவையில் அதிக பெண்கள் இருப்பார்கள் என்று டகாயிச்சி கூறியிருக்கிறார்.

ஆனால், இவர் திருமணமான தம்பதிகள் ஒரே குடும்பப் பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்ற 19ஆம் நூற்றாண்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும், சக்கரவர்த்தி குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே வாரிசாக இருக்க வேண்டும் என்ற பழமைவாத நிலைப்பாட்டையும் ஆதரிக்கிறார்.

55
சவால்களும் பொருளாதாரக் கொள்கையும்

வரும் வாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் விஜயம் டகாயிச்சி எதிர்கொள்ளும் முதல் சவாலாக இருக்கும். ஜப்பானின் ரஷ்ய எரிசக்தி இறக்குமதியை நிறுத்த வலியுறுத்தும் டிரம்ப், பாதுகாப்புச் செலவை அதிகரிக்கவும் கோருகிறார்.

ஜப்பானின் மக்கள் தொகை வீழ்ச்சியைத் தடுப்பதும் மந்தமான பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதும் டகாயிச்சியின் முன் இருக்கும் நீண்ட கால சவால்களாகப் பார்க்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறுபான்மை பலத்துடன் இருப்பதால், சட்டங்களை நிறைவேற்ற மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டியிருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories