அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கிறார். டிரம்புடன் மோதல் போக்கில் உள்ள எலான் மஸ்க் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு (CEO) வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், மெட்டா தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் உள்பட தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பலர் இதில் பங்கேற்க உள்ளனர்.
25
விருந்தில் பங்கேற்கும் முக்கியப் புள்ளிகள்
கூகுள் நிறுவனர் செர்கே பிரின், தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, ஓப்பன்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், ஆரக்கிள் தலைமைச் செயல் அதிகாரி சஃப்ரா காட்ஸ் போன்ற பெயர்கள் இந்த விருந்தில் பங்கேற்பவர்களின் பட்டியலில் உள்ளன.
35
எலான் மஸ்க்
ஒரு காலத்தில் டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்த எலான் மஸ்க், இந்த விருந்தில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. அரசின் செயல்திறன் துறையின் தலைவராக இருந்த மஸ்க், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் பதவியில் இருந்து விலகினார்.
டிரம்பின் வரி குறைப்பு மசோதா மற்றும் அரசின் செலவினங்கள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் இடையேயான மோதலுக்கு முக்கிய காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த இரவு விருந்து, வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டன் பகுதியில் நடைபெற உள்ளது. இங்குள்ள புல்வெளியில் டிரம்பின் மார்-எ-லாகோ கிளப்பில் உள்ளதைப் போல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. " விருந்திற்கு வரும் முன்னணி வர்த்தகம், அரசியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர்களை வரவேற்க அதிபர் டிரம்ப் காத்திருக்கிறார்," என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டேவிஸ் இங்லே தெரிவித்துள்ளார்.
55
மெலனியா டிரம்ப் அளித்த விருந்து
இந்த விருந்துக்கு முன்னதாக, மெலனியா டிரம்ப் தலைமையில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு கல்வி தொடர்பான கூட்டத்திலும் சிலர் விருந்தினர்காளக பங்கேற்றனர். அமெரிக்க இளைஞர்களுக்கான செயற்கை நுண்ணறிவு கல்வியை மேம்படுத்துவதற்காக அந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.