சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் ஆகியோர் ஒருவருக்கொருவர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், அவர்களின் அரிய பேச்சு ஒரு மைக்ரோஃபோனில் பதிவு செய்யப்பட்டது. அந்த உரையாடலில், இருவரும் 150 ஆண்டுகள் வாழும் நம்பிக்கையைப் பற்றி பேசுகிறார்கள். அதே நேரத்தில், கிம் ஜாங் உன் சிரித்துக் கொண்டிருந்தார். புதினும், ஜி ஜின்பிங்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
புதினின் மொழிபெயர்ப்பாளர் அரசு சிசிடிவி பதிவில் சீன மொழியில் சொல்வது கேட்டது. அதில், ‘‘உயிரி தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மனித உறுப்புகளை தொடர்ந்து இடமாற்றம் செய்யலாம். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையாகி அழியாமையை அடைய முடியும்’’ என புடின் கூறியுள்ளார்.