இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்ததற்கு டிரம்ப் நியாயம் கூறியுள்ளார். இந்தியா 'வரி இல்லாத' வர்த்தக ஒப்பந்தம் வழங்கியதாகக் கூறும் அவர், அமெரிக்க நீதிமன்றத்தின் எதிர்ப்பையும் சந்திக்கிறார்.
இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்த தனது முடிவை நியாயப்படுத்திப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா தனக்கு 'வரி இல்லாத' வர்த்தக ஒப்பந்தத்தை வழங்கியதாக மீண்டும் கூறியுள்ளார். ஆனால், அமெரிக்காவின் நீதிமன்றமே டிரம்ப் விதித்த வரிகள் 'சட்டவிரோதமானவை' என்று தீர்ப்பளித்துள்ளதால், உள்நாட்டிலேயே அவருக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
25
டிரம்பின் குற்றச்சாட்டுகள்
"நான் மற்றவர்களை விட வரிகள் பற்றி நன்கு அறிவேன். இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் அதிக வரி விதித்து அமெரிக்காவை பாதிக்கின்றன. இந்தியா உலகின் மிக அதிக வரி விதிக்கும் நாடு. நான் வரி விதித்ததால்தான், இந்தியா இப்போது வரி ரத்து ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. நான் வரி விதிக்காமல் இருந்திருந்தால், அவர்கள் இந்த ஒப்பந்தத்தை அளித்திருக்க மாட்டார்கள்" என்று டிரம்ப் 'தி ஸ்காட் ஜென்னிங்ஸ் ரேடியோ ஷோ'வில் தெரிவித்தார்.
இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் பலமுறை இதே கருத்தை அவர் கூறி வருகிறார். இந்தியாவுடன் பல தசாப்தங்களாக இருந்து வந்த வர்த்தக உறவு "முற்றிலும் ஒருதலைப்பட்சமானது, ஒருதலைப்பட்சமான பேரழிவு" என்றும் அவர் சாடினார்.
35
அமெரிக்கப் பொருட்களைக் குறைவாக வாங்கும் இந்தியா
"இந்தியா எங்களிடம் இருந்து மிகக் குறைந்த அளவே பொருட்களை வாங்குகிறது. ஆனால், எங்களுக்கு அதிக அளவில் பொருட்களை விற்கிறது. இதற்கு காரணம், இந்தியா எங்கள் மீது அதிக வரி விதிப்பதே. இதனால், எங்கள் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் பொருட்களை விற்க முடியவில்லை. இது ஒருதலைப்பட்சமான பேரழிவு" என்றும் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
டிரம்பின் இந்த வரிக் கொள்கைகளுக்கு அமெரிக்காவிற்குள்ளேயே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், "டிரம்ப் தனது குடும்பத்தின் வணிக நலன்களுக்காக பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்ய, இந்தியாவுடனான உறவுகளைப் புறக்கணித்துவிட்டார்" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். "அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஜெர்மனி அல்லது ஜப்பான் போன்ற நட்பு நாடுகளை அமெரிக்காவை நம்ப முடியுமா என யோசிக்க வைத்துள்ளது" என்றும் அவர் கூறினார்.
55
இந்திய மக்கள் முதிர்ச்சியானவர்கள்
யுஎஸ்-இந்தியா உத்திசார் கூட்டுறவுக் கூட்டமைப்பின் (USISPF) தலைவர் முகேஷ் அகி, "டிரம்ப் வெளியிடும் சில கருத்துக்கள் உண்மையாக இருக்கலாம், சிலவற்றிற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்கலாம். இந்திய மக்கள் முதிர்ச்சியானவர்கள், நாட்டின் நன்மைக்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள்" என்று கூறுகிறார்.