ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ. 4.6 லட்சம் கிடைக்கும்; டிரம்ப், மஸ்க் சிக்கன நடவடிக்கை

Published : Feb 20, 2025, 04:58 PM ISTUpdated : Feb 20, 2025, 05:20 PM IST

20% of DOGE savings back to Americans: அமெரிக்க அரசாங்க சேமிப்பில் 20% மக்களுக்கு திருப்பித் தரப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். எலான் மஸ்க் தலைமையிலான துறையின் சேமிப்பிலிருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

PREV
16
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ. 4.6 லட்சம் கிடைக்கும்; டிரம்ப், மஸ்க் சிக்கன நடவடிக்கை
US President Donald Trump

அமெரிக்காவில் அரசாங்க சேமிப்பில் 20 சதவீதத்தை நாட்டு மக்களுக்கே திருப்பித் தரலாம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள துறையின் சேமிப்பில் இருந்து ஒரு பகுதியை மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

26
Elon Musk and US President Donald Trump

டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, சிறப்பு நிர்வாகத் துறை என்ற பெயரில் அரசுசாரா அமைப்பை ஏற்படுத்தினார். அமெரிக்க அரசு செய்யும் தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவது இந்தத் துறையின் முக்கியப் பொறுப்பு. இத்துடன் செலவினக் கணக்குகளை முறைப்படுத்தும் பணிகளையும் இந்தத் துறை கவனிக்கும்.

36
Trump and Musk

அதிபர் தேர்தலின்போது டிரம்ப்க்கு ஆதரவு தெரிவித்த தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த் துறையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எலான் மஸ்க் பொறுப்பேற்ற உடனேயே பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவிகளை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

46
Donald Trump and Elon Musk

இந்நிலையில்,எலான் மஸ்க்கின் துறையிலிருந்து 20% சேமிப்பை அமெரிக்க மக்ககளுக்கே திருப்பி கொடுக்க இருப்பதாகவும் மேலும் 20 சதவீதம் நாட்டின் கடன் சுமையைக் குறைக்க ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

56
Trump on DOGE savings

"ஒரு முக்கிய முடிவெடுக்கப் பரிசீலித்து வருகிறோம். அரசாங்கத் திறன் துறையில் இருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்கக் குடிமக்களுக்கே திருப்பி தரப்போகிறோம். இன்னும் 20% தொகையை வைத்து கடன்களை அடைக்கத் திட்டமிட்டுள்ளோம். பல பில்லியன் டாலர் சேமிப்பில் இருந்து 20 சதவீதத்தை நாட்டு மக்களுக்குத் திருப்பிக் கொடுப்பது பற்றி பரிசீலனை செய்கிறோம்" என்று டொனால்டு டிரம்ப் கூறியிருக்கிறார்.

66
20% DOGE savings back to Americans

டிரம்ப் கூறியுள்ளபடி அரசாங்கத் திறன் துறையின் 20% சேமிப்பு அமெரிக்க மக்களுக்கு வழங்கப்பட்டால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் $5,000 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்திய ரூபாயில் சுமார் 4.6 லட்சம் வரை மதிப்புடையது ஆகும்.

இதேபோல, 20% சேமிப்பை கடனை அடைக்க பயன்படுத்தினால், அமெரிக்க அரசின் 36 ட்ரில்லியன் டாலர் கடன் தீர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories