டொனால்ட் டிரம்ப் போட்ட கையெழுத்து! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடுத்த அடி!

Published : Feb 20, 2025, 03:57 PM IST

அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகளுக்ககாக கூட்டாட்சி சலுகைகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.

PREV
14
டொனால்ட் டிரம்ப் போட்ட  கையெழுத்து! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடுத்த அடி!
டொனால்ட் டிரம்ப் போட்ட கையெழுத்து! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு அடுத்த அடி!

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதை கொள்கையாக வைத்துள்ளார். அதன்பேரில் இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்நத சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்களும் தொடர்ந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதுவரை அமெரிக்காவில் இருந்து மூன்று விமானங்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், சட்டவிரோத குடியேறிகளை பாதிக்கும் ஒரு உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். 

24
டொனால்ட் டிரம்ப்

அதாவது அமெரிக்காவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கான கூட்டாட்சி சலுகைகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்த சலுகைகள் வரி செலுத்துவோரின் வளங்களை முறையற்ற முறையில் பயன்படுத்துவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த உத்தரவால் எந்த திட்டங்கள் பாதிக்கப்படும் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ளவர்களுக்கு கூட்டாட்சி நிதியளிக்கப்பட்ட சலுகைகளை அடையாளம் காணவும் முகவர் நிறுவனங்கள் மற்றும் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

'எங்களை காப்பாற்றுங்கள்' கதறும் இந்தியர்கள்! கைவிட்ட அமெரிக்கா! கண்டுகொள்ளாத இந்தியா!

34
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர்

ஆவணமற்ற குடியேறிகள் பெரும்பாலும் கூட்டாட்சி சலுகைகளுக்குத் தகுதியற்றவர்கள், அவசரகால சூழ்நிலைகளுக்கு சில விதிவிலக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் பல புலம்பெயர்ந்த குடும்பங்கள் தாங்கள் தகுதியுள்ள திட்டங்களில் சேரத் தயங்குகின்றன என்று தேசிய குடியேற்ற சட்ட மையம் தெரிவித்துள்ளது.

டிரம்பின் சமீபத்திய உத்தரவு, கூட்டாட்சி நிதிகள் "சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிக்க அல்லது ஆதரிக்க" பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆவணமற்ற குடியேறிகளை நாடு கடத்தும் கூட்டாட்சி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் சில வரம்புகளைக் கொண்ட மாநிலங்கள், மாவட்டங்கள் அல்லது நகரங்களுக்கு அந்த லேபிள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 

44
சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்கா

ஆவணமற்ற குடியேறிகள் பல்வேறு கூட்டாட்சி நலத்திட்டங்களுக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த மக்களை ஆதரிப்பதற்காக முந்தையை ஜோ பைடன் நிர்வாகம் பில்லியன்களை செலவழித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.  இடதுசாரி வரி ஆராய்ச்சிக் குழுவான வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கை குறித்த நிறுவனத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு பகுப்பாய்வின்படி, ஆவணமற்ற குடியேறிகள் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கு பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை பங்களித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு ராணுவ விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

'உக்ரைனே இருக்காது' டொனால்ட் டிரம்ப் ஆவேசம்! ஜெலென்ஸ்கி பதிலடி! முற்றும் மோதல்!
 

Read more Photos on
click me!

Recommended Stories