'எங்களை காப்பாற்றுங்கள்' கதறும் இந்தியர்கள்! கைவிட்ட அமெரிக்கா! கண்டுகொள்ளாத இந்தியா!

Published : Feb 20, 2025, 11:05 AM IST

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பனாமாவில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உதவி கேட்டு வேண்டுகோள் விடுக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

PREV
14
'எங்களை காப்பாற்றுங்கள்' கதறும் இந்தியர்கள்! கைவிட்ட அமெரிக்கா! கண்டுகொள்ளாத இந்தியா!
'எங்களை காப்பாற்றுங்கள்' கதறும் இந்தியர்கள்! கைவிட்ட அமெரிக்கா! கண்டுகொள்ளாத இந்தியா!

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மக்களை அந்நாட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றி வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை அமெரிக்காவில் இருந்து மூன்று விமானங்கள் மூலம் 300க்கும் மேற்பட்ட சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். 

அமெரிக்க அரசு சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு ஒரு அடிமைகள் போல இந்தியாவுக்கு ராணுவ விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை கண்ணியமாக நடத்த அமெரிக்காவிடம் வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்கள் இரண்டு முறைகளில் நாடு கடத்தப்படுகின்றனர்.
 

24
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்கள்

முதலாவது சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை நேரடியாக அமெரிக்கா ராணுவ விமானங்கள் மூலம் அழைத்து செல்கின்றனர். ஆனால் சில காரணங்களால் சில சட்டவிரோதமாக குடியேறியகளை நேரடியாக நாடு கடத்த முடியாது. இதனால் அவர்களை பனாமா அழைத்து வந்து, அங்கு நாடு கடத்தப்படுவார்கள். இது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பனாமாவுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 பேர் பனாமா அழைத்து வரப்பட்டு அன்குள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் உணவு, உறைவிடம் அளிக்கப்படுகிறது. ஆனால் இதில் 40% க்கும் அதிகமானோர் 'சொந்த நாட்டில் நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது' என்று கூறி  தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப மறுத்து வருகின்றனர்.

'உக்ரைனே இருக்காது' டொனால்ட் டிரம்ப் ஆவேசம்! ஜெலென்ஸ்கி பதிலடி! முற்றும் மோதல்!
 

34
சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்பும் அமெரிக்கா

இதனால் அவர்களை நாடு கடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இவர்களை மாற்று வழியில் நாடு கடத்த பனாமா குடியேற்ற அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், பனாமா ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் 'தங்களுக்கு பாதுகாப்பில்லை. எங்கள் நாட்டில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்களை காப்பாற்றுங்கள்' என்று கூறும் போஸ்டர்களை பனாமா ஹோட்டல்களின் கண்ணாடி வழியாக காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ கூறுகையில், ''பனாமாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவர்கள் மருத்துவ உதவி மற்றும் உணவைப் பெறும் ஒரு ஹோட்டலில் இந்த குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சர்வதேச அதிகாரிகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப ஏற்பாடு செய்யும் வரை அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.
 

44
பனாமா

இந்த குடியேறிகளில் 40%க்கும் அதிகமானோர் தாமாக முன்வந்து தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பவில்லை என்பதால் இவர்களை மாற்று வழியில் வெளியேற்ற முயற்சி செய்து வருகிறோம். நாடுகடத்தப்பட்ட 300 பேரில் 171 பேர் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பின் உதவியுடன் அந்தந்த நாடுகளுக்குத் திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.

அமெரிக்க கருவூலத்தில் இருந்து தங்கம் காணாமல் போனதா? எலான் மஸ்க் பரபரப்பு குற்றச்சாட்டு!!
 

click me!

Recommended Stories