மண்ணை விஷமாக்கும் உலோக மாசுபாடு! 1.4 பில்லியன் மக்களுக்கு ஆபத்து!

Published : Apr 20, 2025, 11:49 AM ISTUpdated : Apr 20, 2025, 11:56 AM IST

உலகளவில் 1.4 பில்லியன் மக்கள் நச்சு உலோகங்களால் மாசுபட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். விளைநிலங்களில் 14 முதல் 17 சதவீதம் பாதுகாப்பு வரம்புகளை மீறியுள்ளன, இது உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

PREV
13
மண்ணை விஷமாக்கும் உலோக மாசுபாடு! 1.4 பில்லியன் மக்களுக்கு ஆபத்து!

மண்ணில் நச்சுத்தன்மை:

உலகளவில் 1.4 பில்லியன் மக்கள் நச்சு உலோகங்களால் மாசுபட்ட பகுதிகளில் வாழ்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சயின்ஸில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. இந்த மக்கள் வாழும் பகுதிகள் ஆர்சனிக், காட்மியம், கோபால்ட், குரோமியம், தாமிரம், நிக்கல் மற்றும் ஈயம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த கன உலோகங்களால் மாசுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

டெய் ஹூ மற்றும் அவரது சகாக்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் 'சையின்ஸ்'  (Science) இதழில் வெளியாகியுள்ளன. உலகளாவிய நில மாசுபாட்டு முறைகளை மேம்பட்ட இயந்திர கற்றல் முறையைப் பயன்படுத்தி ஆய்வைச் செய்துள்ளனர். 1,493 பிராந்தியங்களில் நடத்திய ஆய்வுகளில் இருந்து கிட்டத்தட்ட 8,00,000 மண் மாதிரிகளை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்துள்ளது.

உலகின் விளைநிலங்களில் 14 முதல் 17 சதவீதம், அதாவது சுமார் 242 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு விவசாயம் செய்வதற்கான பாதுகாப்பு வரம்புகளை மீறியுள்ளன. இந்த நிலங்கள் குறைந்தது ஒரு கன உலோகத்தால் மாசுபட்டுள்ளன என இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்

23
Heavy metal contamination

நச்சு உலோகக் கலப்பு:

இந்தப் பரவலான மாசுபாடு, பயிர் விளைச்சலைக் குறைப்பதன் மூலமும், உணவுச் சங்கிலியில் நச்சு உலோகங்களைக் கலக்கிறது. இதன் மூலம் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைப்பு ஆரோக்கியம் மற்றும் பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகிறது. குறிப்பாக, யூரேசியா அட்சரேகை முழுவதும் அங்கீகரிக்கப்படாத உலோகத்தால் மாசடைந்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இது இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

இந்த உயர்-ஆபத்து மண்டலம் தோன்றியதற்கு புவியியல் காரணிகள் இருந்தாலும், சுரங்கம், தொழில்மயமாக்கல் மற்றும் நீர்ப்பாசன நடைமுறைகள் உள்ளிட்ட மனிதர்களின் தாக்கங்களும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.  மண்ணில் உலோக மாசு அதிகரிப்பதில் காலநிலை மாற்றமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என ஆய்வு சுட்டிக்காடுகிறது.

தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காட்மியம் மிகப் பரவலான மாசுபடுத்தியாக உருவெடுத்துள்ளது. இது சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நிக்கல், குரோமியம், ஆர்சனிக் மற்றும் கோபால்ட் போன்ற பிற உலோகங்களும் பல இடங்களில் பாதுகாப்பான அளவை மீறியுள்ளன.

பிரதமர் மோடி 22ஆம் தேதி சவுதி அரேபியா பயணம்

33
Soil pollution

உணவு, நீரில் கலக்கும் மாசு:

இந்த நச்சு உலோகங்கள் மண்ணில் பல ஆண்டுகளாக நிலைத்திருப்பது, உணவு மற்றும் நீர் மூலம் மனித உடலில் கலந்து நரம்பியல் குறைபாடுகள், வளர்ச்சி குறைபாடுகள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக முக்கியமான உலோகங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இச்சூழலில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மண் மாசுபாடு மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அபாயங்களைக் குறைக்கவும் வலுவான சுற்றுச்சூழல் விதிமுறைகள் தேவை. மேம்பட்ட மண் கண்காணிப்பு, நிலையான விவசாய நடைமுறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவையும் அவசியம் என ஆய்வாளரகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த ஆய்வு, நச்சு உலோக மண் மாசுபாட்டை உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதார நெருக்கடியாகப் பார்க்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த ஆய்வு கோருகிறது.

தினமும் ரூ.6 கோடி நன்கொடை! 3வது முறையாக அம்பானியை மிஞ்சிய சிவ் நாடார்!

Read more Photos on
click me!

Recommended Stories