உலக அழிவின் தொடக்கமா? 2025 குறித்து பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்புகள்!

First Published | Sep 26, 2024, 11:14 AM IST

"பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று பிரபலமாக அறியப்படும் பாபா வங்காவின் பல கணிப்புகள் உண்மையான நிலையில், 2025 ஆம் ஆண்டு குறித்த அவரின் கணிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Baba Vanga's Predictions for 2025

2024-ம் ஆண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஆனால் இந்த ஆண்டு சர்வதேச அளவில் பல முக்கியமான நடந்தன். ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம், தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர்,  தீவிர வலதுசாரிகளின் தொடர்ச்சியான எழுச்சி என பல நிகழ்வுகளை அடுக்கொண்டே போகலாம்.

அதுமட்டுமின்றி, மனிதர்கள் மற்றும் அரசாங்கங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் பரவி வரும் சக்திவாய்ந்த AI தொழில்நுட்பத்தின் தற்போதைய அச்சுறுத்தல் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

2025 ஆம் ஆண்டு உலகின் இறுதிக்காலம் தொடங்கும் என்று பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா ஏற்கனவே கணித்துள்ளார். குறிப்பாக, நமது அழிவின் ஆரம்பம் அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் ஒரு மோதலுடன் தொடங்கும் என்றும் இது ஐரோப்பா கண்டத்தின் மக்களை அழிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அழிவின் தொடக்கமாக இருக்கும், இறுதியில் நமது அழிவில் உச்சக்கட்டத்தை அடையும் என்று அவர் கூறியுள்ளார். அதாவது 2025 நமது முடிவின் தொடக்கமாக இருக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Baba Vanga Predictions 2025

"பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்று பிரபலமாக அறியப்படும் பாபா வங்கா 1911 இல் வடக்கு மாசிடோனியாவில் பிறந்தார். ஆனால் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பல்கேரியாவில் கழித்தார் பாபா வங்கா. வாங்கெலியா பாண்டேவா குஷ்டரோவா என்பது அவரின் இயற்பெயர். மிகப்பெரிய புயலில் சிக்கிய பாபா வங்கா, தனது 12 வயதில் பார்வையை இழந்தார். எனினும் பின்னர் அவர், எதிர்காலத்தை பற்றி கணிக்க தொடங்கினார்.

பாபா வங்காவின் பல கணிப்புகள் உண்மையானதால் அவர் பிரபல தீர்க்கதரிசியாக மாறினார். எதிர்காலத்தை கணிப்பது மட்டுமின்றி இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுக்காகவும் அவர் அறியப்பட்டார். 1996 இல் இறந்த பாபா வங்காவின் கணிப்புகள் 85 சதவீதம் துல்லியமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tap to resize

Baba Vanga's Predictions for 2025

உதாரணமாக, இளவரசி டயானாவின் மரணம், ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலான குர்ஸ்க் மூழ்கியது மற்றும் 9/11 பயங்கரவாத தாக்குதல்களை பாபா வங்கா முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தனது 85 வயதில் அவர் தனது மரணத்தை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் என்ன நடக்கும் என்பதை அவர் கணித்துள்ளார். அதன்படி அவர் 5079 வரை என்ன நடக்கும் என்று அவர் கணித்துள்ளார். சரி, 2025-ம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் என்னென்ன?

2025: ஐரோப்பாவில் போர்

மனிதகுலத்தின் அழிவைத் தூண்டும் வகையில் ஐரோப்பாவில் ஒரு போர் ஏற்படும். இந்த போரில் பலர் உயிரிழக்கக்கூடும்.

2028: வெள்ளி கிரகத்தில் ஆய்வு

மனிதர்கள் வெள்ளி கிரகத்தை ஆராய தொடங்குவார்கள். சூரியனில் இருந்து வரும் இரண்டாவது கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

2033: பனிக்கட்டிகள் உருகுதல்

துருவப் பனிக்கட்டிகள் உருகி, கடல் மட்டத்தை உலகளவில் கடுமையான உயரத்திற்கு உயர்த்தும் என்று பாபா வங்கா முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது.

Baba Vanga Prediction

கம்யூனிசத்தின் மறுபிரவேசம்

2076: கம்யூனிசத்தின் மறுபிரவேசம் நடக்கும் அவர் கணித்துள்ளார். கம்யூனிசம் உலகம் முழுவதும் பரவும்.

2130: முதல் தொடர்பு

மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள். 

2170: உலகளாவிய வறட்சி

காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வறட்சி உலகின் பெரும்பகுதியை அழிக்கும்.

3005: செவ்வாய் கிரகத்தில் போர்

பூமியில் இருக்கும் மனிதர்களுக்கும் செவ்வாய் கிரகத்தில் ஒரு நாகரிகத்துடன் போர் நடக்குமாம். இந்த போரை தொடங்கப்போவது யார் என்பது பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை,

3797: உலகின் முடிவு - பகுதி I

பூமியில் இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்படும், அதாவது செவ்வாய்ப் போரில் இருந்து தப்பிய மனிதர்கள் பூமியை காலி செய்ய வேண்டும், ஏனெனில் பூமி வாழத் தகுதியற்ற கிரகமாக மாறிவிடும். 

5079: உலகின் முடிவு - பகுதி II

ஒட்டுமொத்த உலகமும் 5079-ம் ஆண்டில் அழிந்துவிடும்.

Baba Vanga's Predictions for 2025

பாபா வங்காவின் பல கணிப்புகள் உண்மையாக மாறினாலும், அவரின் கணிப்புகள் அனைத்துமே முழுமையாக நடக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டியதும் அவசியம். குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு பெரிய அணுமின் நிலையம் வெடிக்கும் என்றும் பூமி ஒரு பேரழிவு தரும் சூரிய புயலால் தாக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்திருந்தார். அது போன்ற எந்த பேரழிவு நிகழ்வுகளும் நடக்கவில்லை. 

2024இல் மூன்றாம் உலகப் போர் பற்றியும் பாபா வங்கா கணித்திருந்தார். 2024 ஆம் ஆண்டில், உயிரியல் தாக்குதல்கள், ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் 3 ஆம் உலகப் போர் போன்ற பல பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும் என்று அவர் கணித்திருந்தார். இந்த ஆண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் அவரின் இந்த கணிப்புகளும் உண்மையாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Latest Videos

click me!