குவெட்டா குண்டுவெடிப்பில் 10 பாகிஸ்தான் வீரர்கள் பலி; பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு

Published : Apr 26, 2025, 09:46 AM ISTUpdated : Apr 26, 2025, 10:03 AM IST

வெள்ளிக்கிழமை குவெட்டாவில் பலூச் விடுதலை ராணுவம் (BLA) நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். குவெட்டாவின் புறநகர்ப் பகுதியான மார்கட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் வாகனத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு BLA பொறுப்பேற்றுள்ளது. #BREAKING: Baloch Liberation Army freedom fighters eliminated 10 personnel of the occupying Pakistani Army in a remote-controlled IED attack in Margat, a suburb of Quetta, and the target vehicle was destroyed in the attack. Pakistani soldiers helpless in Balochistan. pic.twitter.com/ZNvHgv5XoE — Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 25, 2025

PREV
15
குவெட்டா குண்டுவெடிப்பில் 10 பாகிஸ்தான் வீரர்கள் பலி; பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு
Pakistan soldiers killed in blast at Quetta

பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள்:

வெள்ளிக்கிழமை குவெட்டாவில் பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் குழுவான பலூச் விடுதலை ராணுவம் (BLA) நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். குவெட்டாவின் புறநகர்ப் பகுதியான மார்கட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் வாகனத்தைக் குறிவைத்து இந்த இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

25
BLA attack on Pakistan Army Convoy

பலூச் விடுதலை ராணுவம்:

இந்தத் தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army) பொறுப்பேற்றுள்ளது, அதன் போராளிகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டை வெடிக்கச் செய்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளாது. "இந்த குண்டுவெடிப்பு எதிரியின் வாகனத்தை முற்றிலுமாக அழித்தது. சுபேதார் ஷெஹ்சாத் அமீன், நைப் சுபேதார் அப்பாஸ், சிப்பாய் கலீல், சிப்பாய் ஜாஹித், சிப்பாய் குர்ராம் சலீம் மற்றும் பலர் உட்பட அதில் இருந்த 10 பணியாளர்களும் கொல்லப்பட்டனர்," என்று பி.ஏல்.ஏ. செய்தித் தொடர்பாளர் ஜியாந்த் பலோச் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

35
Baloch Liberation Army

'தாக்குதல் தொடரும்':

பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வரும் நாட்களில் தீவிரமடையும் என்றும் BLA எச்சரித்துள்ளது. "எங்கள் சுதந்திரத்திற்கான போராட்டம் தடைபடாது. எங்கள் முழு பலத்துடன் எதிரியைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குவோம்" என்று கூறியுள்ளது.

45
BLA IED attack in Quetta

பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள்:

பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக பலூசிஸ்தான் கிளர்ச்சிக் குழு தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இது அந்தப் பிராந்தியத்தில் பதற்றதை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் வளங்கள் நிறைந்த மாகாணமாகக் கருதப்படும் பலூசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கக் கோரி பலூசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் பல வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

55
Quetta blast

பாதுகாப்புச் சாவடிகளைக் கைப்பற்றினர்:

சென்ற வியாழக்கிழமை பலுசிஸ்தானில் நடந்த தனித்தனி தாக்குதல்களில் 7 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானார்கள். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்கள் ஜமுரான், கோல்வா மற்றும் கலாட் மாவட்டங்களில் நடந்தன. சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்புச் சாவடிகளும் கைப்பற்றப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories