காஷ்மீரில் 1000 ஆண்டுகளாக நடக்கும் சண்டை! இதுதான் தீர்வுக்கு வழி! டிரம்ப் சொல்கிறார்!

Published : Apr 26, 2025, 08:06 AM IST

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார். 

PREV
14
காஷ்மீரில் 1000 ஆண்டுகளாக நடக்கும் சண்டை! இதுதான் தீர்வுக்கு வழி! டிரம்ப் சொல்கிறார்!

 Donald Trump condemns Pahalgam attack: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கடும் தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளன.

24
Donald Trump condemns Pahalgam attack

டொனால்ட் டிரம்ப் கருத்து

ஜம்மு காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் இந்த தாக்குதலுக்கு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், 'ஜம்ம்மு காஷ்மீர் தாக்குதல் மிக மோசமானது' என மீண்டும் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முதல் முறையாக பொது வெளியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜம்மு காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பதட்டங்கள் நீடித்து வருவதாகக் கூறினார். 

1000 ஆண்டுகளாக சண்டை 

இந்தத் தாக்குதல்களை 'மோசமானவை' என்று குறிப்பிட்ட டிரம்ப்இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான தனது நெருங்கிய உறவை வலியுறுத்தியதால், இரு தரப்பினரும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் குறித்து பேசிய டிரம்ப், ''நான் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன், உங்களுக்குத் தெரியும், அவர்கள் காஷ்மீரில் ஆயிரம் ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தைக் கொண்டுள்ளனர். நேற்று நடந்தது மோசமானது தாக்குதல். 30க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்'' என்று தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆதரவு அளிக்கிறோம்! உண்மையை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்!

34
INDIA vs PAKISTAN

எப்போதும் பதற்றம் 

தொடர்ந்து பேசிய டிரம்ப், ''1,500 ஆண்டுகளாக அந்த எல்லையில் (ஜம்மு காஷ்மீர்) பதட்டங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும். அது அப்படியேதான் இருந்தது, ஆனால் அவர்கள் அதை ஒரு வழியிலோ அல்லது வேறு வழியிலோ கண்டுபிடித்துவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன். இரு தலைவர்களையும் நான் அறிவேன். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது, ஆனால் எப்போதும் இது இருந்து வருகிறது'' என்று கூறினார்.

44
Pahalgam terror attack

இந்துக்களை குறிவைத்து தாக்குதல்

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், "பஹல்காமில் 26 இந்துக்களை குறிவைத்து கொன்ற கொடூரமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாங்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம். இந்த சம்பவத்தில் அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா கண்டுபிடித்து தண்டிக்கும்போது நாங்கள் உடன் நிற்போம்'' என்று கூறியுள்ளார். 
 

சண்டைக்கு ரெடியா.. இந்தியா - பாகிஸ்தான் போர் ஆரம்பமா.? மோடி பிளான்

Read more Photos on
click me!

Recommended Stories