Unknown Fact of Abroad Study | வெளிநாட்டில் படிப்பு பணம் இருந்தால் மட்டுமா?

First Published | Aug 16, 2024, 3:25 PM IST

வெளிநாடுகளில் சென்று படிப்பது இன்றைய காலத்தில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஒரு சிலருக்கு அது எட்டாக்கனியாகவே உள்ளது. யாரெல்லால் வெளிநாடுகளில் சென்று படிக்க முடியும்? வெளிநடுகளில் படிப்பது நல்லதா கெட்டதா என்பதை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு!
 

Abroad Study

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என ஓர் பழமொழி தமிழில் உண்டு. அதன் பொருள் கடல்கடந்து சென்றாவது பொருளை அறிந்துகொள்ளுங்கள் என்பதாகும். இந்தியாவில் இருந்து பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வர் பலர் இருக்க, படிக்க செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மருத்துவத்திற்கு நீட் தேர்வு வந்தவுடன், ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராகி பணியாற்றி வருகின்றனர்.

அவ்வாறு படிப்பது எளிது என்றாலும் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற மீண்டும் ஒரு தேர்வு எழுதி, அரசின் வழிகாட்டுதலின் படி அரசு மருத்துவமனையில் பயிற்சிமருத்துவராக பணியாற்றியபின்னர் தான் இயலும். வெளிநாடுகளில் சென்று படிப்பது அவ்வளவு எளிதான காரியமா? இல்லையா என நீங்கள் கேட்கலாம்? அதற்கான பதிலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Study Abroad

பணம் படைத்தவர்கள் மட்டும்தான் வெளிநாடுகளில் படிக்க இயலுமா?

இல்லை, யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கு முன் உங்கள் படிப்பு மற்றும் சேரப்போகும் வெளிநாட்டு பல்கலைக்கழகம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான ஸ்கார்ஷிப்-ஐ வழங்குகிறது. அது, தேர்வுக்கட்டணாமக இருக்கலாம், தங்கும் வசதிக்கட்டணமாக இருக்கலாம், பயிற்சி கட்டணமாக இருக்கலாம். அவ்வாறு பல ஊக்க தொகைகள் வழங்கப்படுகிறது. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தங்களுக்கான கல்வியையும், பல்கழகத்தையும் தேர்ந்தெடுத்து முறைப்படி ஆய்வு செய்தால், சூழ்நிலையில் பின்தங்கிய மாணவர்களும் வெளிநாட்டில் படிக்கலாம்.

Tap to resize

job offer abroad

வெளிநாட்டில் சென்று படித்தால் வேலை கிடைக்குமா?

வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலை கிடைக்காமல் தவிப்போர் 85% பேர் உள்ளனர். அவர்களது ஆங்கில மொழியின் புரிதல் இல்லாததே காரணமாக உள்ளது. ஆங்கில மொழிப் புலமை இருந்தால் மட்டும் போதுமா என்றால் அதுவும் இல்லை. ஆங்கில மொழியுடன் TOEFL or IELTS படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்தந்த நாடுகளின் உள்ளூர் மொழியையும் குறைந்பட்சம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அது அவர்களது வேலைவாய்ப்பையும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்.

யாரும் ஆகலாம் ஜீரோ டூ ஹீரோ! இவர்களை பாருங்கள்!
 

Study Abroad

சில குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டும் தான் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமா?

என்ன படிக்கப்போகிறோம் என்பதை முடிவுசெய்வுடன், அப்படிப்பை எங்கு படிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். அனைத்தும் இங்கேயே நாம்நாட்டில் கிடைக்கிறதே என்று நினைத்தாலும், சில படிப்புகள் மேலைநாடுகளில் முறையான ஆசிரியர்களுடன், அதற்கான ஆய்வுக்கூடங்களுடன் உள்ளன. அவை இந்தியாவில் இல்லை. எனவே, படிப்பு மற்றும் அதைச்சார்ந்த அனுபவம் கொண்ட ஆரிசிர்கள், ஆய்வுக்கூடங்கள் இருக்கும் இடத்தில் சென்று படிப்பது நல்லது.

Study Abroad

வெளிநாடுகளில் படிப்பது பாதுகாப்பு இல்லையா?

ஆம், பாதுகாப்பு இல்லாத நாடுகள் பல உள்ளன. ஆனாலும் ஏராளமானோர் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். உக்ரைனில் தொடர் போராட்டம் வெளித்து வருகிறது. ஆனால், அங்குதான் மருத்தும் படிக்கும் மாணவர்கள் அதிகம். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தங்களது மாணர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கௌதம் அதானியின் வெற்றிக்கு காரணமே இவங்க தான்.. ப்ரீத்தி அதானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்களை, மேற் கூறியவற்றை கருத்தில் கொண்டு ஒன்றுக்கு இருமுறை சுயமாக சிந்தித்து, மேலும் பல தகவல்களை தேடி அறிந்துகொண்டு முடிவெடுங்கள். வெற்றி நிச்சயம்!

Latest Videos

click me!