பாலைவனம் & மலைத்தொடர்
ஆஸ்திரேலியாவின் கடற்கரையோரப் பகுதிகளிள் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே அப்பகுதிகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார். உள்ளே உள்ள பறந்த நிலப்பரப்பில் குளிர்காற்று தங்க வாய்ப்பு இல்லாததால் மழைபொழிவு இல்லாமல் அப்பகுதிகளில் சுமார். 49.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்கிறது. அவ்வளவு வெப்பநிலையில் மனிதர்கள் வாழ உகந்த சூழ்நிலை அல்ல. மேலும், கிரேட் விக்டோரியா, தி கிரேட் சாண்டி, சிம்சன், டிராரி, பெடிர்கா, கிப்சன், தனாமி ஆகிய 7 பெரிய பாலைவனங்கள் உள்ளன. நியூ சவுல் வேல்ஸ்க்கும், மக்கள் வாழும் பகுதிக்கும் இடையே மிக நீண்ட மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் குளிர் காற்றை பாலைவனப்பகுதிக்குள் அனுமதிக்காததே அப்பகுதிகள் வரண்ட நிலமாக மாற ஒரு காரணமும் கூட.