வாழ்க்கையில் பெரிய விஷயங்களைச் சாதிக்க நாமும் பெரிய இடத்தில் பிறக்க வேண்டிய அவசியமில்லை. மேல்தட்டில் இருப்பவர்களுக்கு வாய்ப்பும், வசதியும் அதிகம்தான். ஆனாலும், இன்றைய கோடீஸ்வரர்களில் பலர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து இன்று கோடீஸ்வரர் ஆனவர்கள். அவர்களின் முயற்சியிம் உழைப்பும் உச்சத்தை அடைவதை யாரும் தடுக்கவில்லை. உங்களையும் தடுக்க முடியாது. உங்கள் முற்சியின் பாதையில் தொடர்ந்து பயணியுங்கள்.
உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க உங்களுக்கு உத்வேகம் தேவைப்பட்டாலும், அல்லது கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பதை அறிய விரும்பினாலும், இந்த பிரபலங்கள் எப்படி முதலிடம் பிடித்தார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
J.K. Rowling
2013ல் லண்டனைச் சேர்ந்த டெய்லி மெயிலுக்கு பேட்டி அளித்துள்ள ஜே.கே.ரௌலிங், ஒற்றே பெற்றோராக இருந்து பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். தன் மகள் சாப்பிடுவதற்காக தான் பட்டிணி கிடந்தையும். எத்தனையோ இரவுகள் பணம் இன்றி தவித்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.
2016ம் ஆண்டு வெளியான அவரது ஹாரிபாட்டர் புத்தகம், ஜேகே ரௌலிங்கை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி ஜூன் 2016 - ஜூன் 2017க்கும் இடையில் அவர் 95 மில்லிடன் டாலர் பணம் சம்பாதித்தார். பின்னர், 2012ல் அவர் 160 மில்லியன் டாலர் பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கினார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு $1 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
Howard Schultz
ஸ்டார்பக்ஸ் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹோவர்ட் ஷூல்ட்ஸ், 73 நாடுகளில் 23,000 சில்லறை விற்பனைக் கடைகளைக் கொண்ட ஒரு மாபெரும் சில்லறை விற்பனையாளராக மாறியுள்ளார். அதன் சந்தை மதிப்பு சுமார் $85 பில்லியன் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
அரசு மானியம் பெறும் வீடுகளில் வாழும் ஏழைக் குழந்தையாக தான் வாளர்ந்ததாக ஹோவர்ட் ஷூல்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்
Kenneth Langone
2013ல் OneWire உடனான நேர்காணலில், தொழிலதிபர் லாங்கோன் தனது வாழ்கை முறையை பகிர்ந்துகொண்டுள்ளார். தன் குழந்தை காலத்தில் தன் தாயார் சிற்றுண்டிச்சாலை பணியாளராக இருந்தா் என்றும், அன்பின் மொத்த உருவமாக தன் தாய் இருந்தால் நல்லமுறையில் வளர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று, லாங்கோனின் நிகர மதிப்பு $3 பில்லியன் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
முதலீடு இல்லாமலே நல்ல லாபம்.. வீட்டிலிருந்து எப்படி கூடுதல் வருமான ஈட்டலாம்?
Sheldon Adelson
2010-ல் "நைட்லைன்" என்ற இதழுக்கு பேட்டி அளித்த அடெல்சன் தனது கடினமான வளர்ப்பு எவ்வாறு ஒரு புத்திசாலியான தொழிலதிபராக மாற உதவியது என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். பாஸ்டன் நகரில் கடுமையான நிதி நெருக்கடியில் வாழ்ந்ததை குறிப்பிட்டுள்ளார். அவரது பெற்றோர் மற்றும் மூன்று உடன்பிறப்புகளுடன் ஒரு சிறு அறை பகிர்ந்து கொண்டதாக தன் ஏழ்மை நிலையை விளக்கியுள்ளார்.
இப்போது அடெல்சன், அமெரிக்காவின் மிகப்பெரிய கேசினோ நிறுவனமான லாஸ் வேகாஸ் சாண்ட்ஸின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஷெல்டன் அடெல்சன் தற்போதைய சொத்து மதிப்பு $35.2 பில்லியன்
அவர் லாஸ் வேகாஸ் மற்றும் பாஸ்டன் பகுதிகளில் உள்ள யூத பள்ளிகளுக்கு $50 மில்லியனுக்கும் அதிகமாக நன்கொடை வழங்கியுள்ளார்.
Harold Hamm
2014ல் ஃபோர்ப்ஸ்-பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ள ஹரோல்ட் ஹாம், தனது குடும்பத்தின் நிதிப்போராட்டங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். 13 குழந்தைகளில் கடைசியாக பிறந்த ஹோரல்ட் ஹாம், குடும்பத்திற்காக வெற்றுகாலுடன் பருத்தி எடுக்கும் தொழிலும், 16 வயதில் எரிவாயு நிலையத்தில் வேலை செய்ததாக தெரிவித்தார்.
தன் முயற்சியை கைவிடாத ஹோரல்ட் ஹாம் இப்போது, பிரபல எண்ணெய் நிறவனமான கான்டினென்டல் ரிசோர்சின் நிறுவன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அவரது சொத்து மதிப்பு $10.1 பில்லியன் டாலர்.