இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து 75 பயணிகளுடன் பேருந்து ஒன்று குருநாகல் நோக்கி வந்துக்கொண்டிருந்தது. அப்போது நுவரெலியா- கம்பளை மலைப்பகுதி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
23
பலர் படுகாயம்
மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
33
புத்த மத துறவிகள்
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பேருந்தில் இருந்த அனைவரும் புத்த மத துறவிகள் என்பதும் 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி உள்ள பேருந்தில் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பேருந்தில் விபத்தில் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.