மேலும் “ கோவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில், உலக ஒழுங்கு ஒரு புதிய வடிவத்தை எடுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவு, முழு உலகத்தின் வலிமையை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். உலக நன்மை மற்றும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக இணைந்து செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் உறுதிபூண்டுள்ளன” என்றும் மோடி தெரிவித்தார்.