ஐ.நா தலைமையகத்தில் யோகா செய்த பிரதமர் மோடி.. பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் பங்கேற்பு..

Published : Jun 21, 2023, 09:22 PM ISTUpdated : Dec 15, 2023, 01:03 AM IST

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி யோகாசனங்களை செய்தார்.

PREV
18
ஐ.நா தலைமையகத்தில் யோகா செய்த பிரதமர் மோடி.. பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் பங்கேற்பு..

 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

28
modi

உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் மோடி யோகாசனம் செய்தார். மேலும், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

38
modi

யோகாவிற்கு காப்புரிமையோ, ராயல்டியோ கிடையாது. யோகா தினத்தை கொண்டாடும் இந்தியாவின் முன்மொழிவுக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்ததை மோடி நினைவுக்கூர்ந்தார்.

48

இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே யோகா பிரபலமாக உள்ளது என்றும் மோடி தெரிவித்தார். யோகா உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று நரேந்திர மோடி கூறினார்.

58

இந்த ஆண்டை தினை ஆண்டாக இந்தியா முன்மொழிந்துள்ளது.. இதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். யோகாவிற்கு மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

68

யோகா என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல என்று கூறிய மோடி, யோகா ஒரு வாழ்க்கை முறை. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை என்றும் தெரிவித்தார்.

78

தன்னுடனும், மற்றவர்களுடனும், இயற்கையுடனும் இணக்கமாக வாழ்வதற்கான ஒரு வழி தான் யோகா எனவும் மோடி கூறினார்.

88

இந்த யோகா இந்த்நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும், பெரும்பாலான நாடுகளில் இருந்து மக்கள் வந்திருந்தனர். இந்த மாபெரும் நிகழ்வு கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories