சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் வியாபித்தது. காட்டுத்தீ போல பரவிய இந்த வைரஸ் பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கின. பொது முடக்கம் ஆகியவற்றை அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
வைரஸ் பரவலால் பொருளாதார அளவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது. தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து விட்டது. மக்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனா அவசர நிலை அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றும் உலக சுகாதர அமைப்பு எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில், சீனாவில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகமாகியுள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஓமிக்ரான் மாறுபாடு XBB கோவிட் தொற்று அதிகரிப்பை சீனா கண்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள், நாடு ஒரு வாரத்தில் 40 மில்லியன் நோய்த்தொற்றுகளை தாண்டும். ஜூன் இறுதிக்குள் வாரந்தோறும் 65 மில்லியனாக இருக்கும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகிறது. முந்தைய அலையில், சீனா ஒரு நாளில் 37 மில்லியன் கொரோனா வைரஸ் கேஸ்களை பதிவு செய்திருந்தது.
தற்போது சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மருந்து பற்றாக்குறையானது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது என்றும், போதுமான வசதிகள் பல இடங்களில் உள்ளது என்றும், தகவல் வெளியாகி உள்ளது. XBB என்பது Omicron இன் BA.2.75 மற்றும் BJ.1 துணை வகைகளின் கலப்பினமாகும். XBB மாறுபாடு BA.2.75 ஐ விட வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்புத் தவிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று நம்பப்படுகிறது.
சீனா புதிய கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு தயாராகி வருகிறது. சீனாவில் புதிய கோவிட் தடுப்பூசிகள் உள்ளன. இது XBB வகைகளை தடுக்கும். தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனம் கடந்த வாரத்தில் அவசரகால கட்டம் முடிந்தாலும், தொற்றுநோய் முடிவுக்கு வரவில்லை என்று கூறியதை முக்கியமாக பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?