நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் - எப்போ தெரியுமா?

Published : May 23, 2023, 11:27 AM ISTUpdated : May 23, 2023, 11:32 AM IST

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், தனது நீண்ட நாள் காதலியான லாரன் சான்செஸுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் - எப்போ தெரியுமா?

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது காதலி லாரன் சான்செஸ் ஆகியோர் இப்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த ஜோடி தற்போது பிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நட்சத்திரங்கள் நிறைந்த பார்ட்டி சர்க்யூட்டில் கலந்து கொண்டனர்.

25

ஜெப் பெசோஸ் காதலி லாரன்  சான்செஸ் அணிந்திருந்த இதய வடிவ மோதிரத்தைப் பற்றிய ஊகங்கள் காரணமாக, இந்த ஜோடி முடிச்சுப் போடத் தயாராகிவிட்டதாக பல மாதங்களாக வதந்திகள் பரவி வருகின்றன. ஜெப் பெசோஸ் தனது 25 வருட மனைவியான மெக்கென்சி ஸ்காட்டிடமிருந்து விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

35

மெக்கென்சி $38 பில்லியனை விவாகரத்து தீர்வில் பெற்றார். இந்த தீர்வு, அமேசானில் முன்னாள் பங்குதாரர்களின் கூட்டுப் பங்குகளில் 25 சதவீதத்துடன் உலகின் மூன்றாவது பணக்காரப் பெண்ணாக அவரை மாற்றியது. இருப்பினும் பெசோஸ் தனது கிட்டத்தட்ட 20 மில்லியன் பங்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

45

மறுபுறம், சான்செஸ் பேட்ரிக் வைட்செல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடன் எல்லா மற்றும் இவான் என்ற இரண்டு குழந்தைகளைப் பெற்று கொண்டார்.  இவர் தனது காதலை வெளிப்படுத்த தன் காதலிக்கு பிரம்மாண்ட கப்பலை வாங்கி கொடுத்துள்ளார்.

55

அதுமட்டுமில்லாமல் லாரன் சான்செஸ்சின் சிற்பத்தை படகில் வைத்துள்ளார் ஜெப் பெசோஸ். இந்த படகின் விலை 500 மில்லியன் டாலர்கள் அதாவது 4,145 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்த படகில் சினிமா தியேட்டர், அதிக எண்ணிக்கையிலான ஓய்வறைகள் மற்றும் பிஸ்னஸ் ரூம் போன்றவை இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

click me!

Recommended Stories