பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை
இதன்பிறகு பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்கவும் இந்தியா, இலங்கை உறவுகள் குறித்தும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்
இதன்பிறகு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படும் உயரிய விருதான மித்ர விபூஷணன் என்ற மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவித்தார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, இந்தியா செய்த உதவிக்கு அதிபர் அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.