
India-Thailand Sign New Agreements in Presence of Prime Ministers: பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை சந்தித்து பேசினார். இரு நாட்டின் தலைவர்களும் இந்த சந்திப்பின்போது பல்வேறு துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புக்கு புதிய வீரியத்தையும் சுறுசுறுப்பையும் சேர்க்கும் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
பாங்காக்கில் உள்ள அரசு மாளிகையில் இந்தியா-தாய்லாந்து மூலோபாய கூட்டாண்மையை நிறுவுவது குறித்த கூட்டுப் பிரகடனத்தைத் தவிர, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்து தாய்லாந்தின் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூக அமைச்சகம் மற்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
குஜராத்தின் லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை (NMHC) மேம்படுத்துவதற்காக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் சாகர்மாலா பிரிவு மற்றும் தாய்லாந்தின் நுண்கலை துறை, கலாச்சார அமைச்சகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவின் தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (NSIC) மற்றும் தாய்லாந்தின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு அலுவலகம் (OSMEP) இடையே மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (MDoNER) மற்றும் தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் மேலும் இந்திய வடகிழக்கு கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NEHHDC) மற்றும் தாய்லாந்து அரசாங்கத்தின் படைப்பு பொருளாதார நிறுவனம் (CEA) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கையும் தாய்லாந்தின் 'ஆக்ட் வெஸ்ட்'யும் ஒன்றையொன்று மிகவும் சிறப்பாக பூர்த்தி செய்கின்றன என்றும் பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைத் திறக்கின்றன என்றும் எடுத்துரைத்தார்.
உளவுத்துறை அச்சம்; சீனாவில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு பறந்த புதிய உத்தரவு; காரணம் என்ன?
''தாய்லாந்துக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையிலான சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் கல்வித் துறைகளில் ஒத்துழைப்பை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். வளர்ந்து வரும் பரஸ்பர வர்த்தகம், முதலீடு மற்றும் வணிக பரிமாற்றங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம். MSME, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
''புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், மின் வாகனங்கள், ரோபாட்டிக்ஸ், விண்வெளி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொடக்க நிறுவனங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இயற்கை இணைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிதி தொழில்நுட்ப இணைப்பை அதிகரிக்க இரு நாடுகளும் பாடுபடும்'' எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீர்வரைவியல் போன்ற மூலோபாய துறைகளில் இந்தியா-தாய்லாந்து மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தியதாகவும் பயங்கரவாதம், பணமோசடி மற்றும் பலவற்றின் சவால்களை சமாளிக்க இணைந்து பணியாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம் என்றும் பிரதமர் மோடி தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
இந்தோ-பசிபிக் பகுதியில், நாங்கள் இருவரும் சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய மற்றும் விதி அடிப்படையிலான ஒழுங்கை ஆதரிக்கிறோம். விரிவாக்கக் கொள்கையை அல்ல, வளர்ச்சியின் கொள்கையை நாங்கள் நம்புகிறோம்" என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தின் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுகக்த்தில் பலர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தனது கவலையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, தாய்லாந்து மக்களுடன் இந்தியா நிற்பதாக ஒன்றுமையை வெளிப்படுத்தினார்.
பிரதமர் மோடிக்கு தாய்லாந்து பிரதமர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட்! என்ன தெரியுமா?