2027ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் முழுமையான AI நகரமாக அபுதாபியை மாற்ற திட்டம்!
Abu Dhabi into the world's First Fully AI city by 2027 : உலகின் முதல் முழுமையான AI நகரமாக மாறுவதை அபுதாபி நோக்கமாகக் கொண்டுள்ளது.
Abu Dhabi into the world's First Fully AI city by 2027 : உலகின் முதல் முழுமையான AI நகரமாக மாறுவதை அபுதாபி நோக்கமாகக் கொண்டுள்ளது.
Abu Dhabi into the world's First Fully AI city by 2027 : தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையில் நாளுக்கு நாள் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. அதோடு அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் அபு தாபி முழுவதையும் AI நகரமாக மாற்றுவதை அந்த அரசு நோக்கமாக கொண்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் உலகின் முதல் முழுமையான AI அரசாங்கமாக அபுதாபியை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, அபுதாபி அரசாங்கம் அதன் டிஜிட்டல் உத்தியை 2025-2027 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் உள்கட்டமைப்பு
இதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபுதாபி அரசு ஒதுக்கியிருக்கிறது. வரும் 2027ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், அனைத்து செயல்பாடுகளிலும் கிளவுட் கம்யூட்டிங்கை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டிருக்கிறது. அரசின் இந்த உத்தியானது 2027ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்திற்கு 24 பில்லியன் திர்ஹம்களுக்கு மேல் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
AI திட்டத்தின் கீழ் AI பயிற்சி
இந்த உத்தி, அனைவருக்கும் AI திட்டத்தின் கீழ் AI பயிற்சி மூலம் குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதை வலியுறுத்துகிறது, அதே நேரத்தில் அரசு சேவைகளுக்கு 200க்கும் மேற்பட்ட AI-இயக்கப்படும் தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. அதோடு, 5000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அகமது அல் குட்டாப் - AI தொழில்நுட்பம்
இது குறித்து அரசு செயல்படுத்தல் துறை தலைவர் அகமது அல் குட்டாப் கூறியிருப்பதாவது: அரசின் டிஎன்ஏவில் AI, கிளவுட் கம்யூட்டிங் மற்றும் அனைத்து தரவுகளின் நுண்ணறிவுகளை இணைப்பதன் மூலமாக மக்களுக்கான பொது சேவை வழங்கலை மாற்றுவோம். அரசின் செயல்பாடுகளை மேம்படுத்துவோம். அதோடு பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - AI-இயங்கும் சேவை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரின் அரசாங்க டிஜிட்டல் உத்தி, ஒரு தசாப்தத்திற்கும் மேலான டிஜிட்டல் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது, மின்-அரசாங்கத்திலிருந்து ஸ்மார்ட்டாகவும், இப்போது குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள வணிகங்களுக்கான AI-இயங்கும் சேவைகளாகவும் முன்னேறி வருகிறது.
AIன் வளர்ச்சி
AIல் விரைவான முன்னேற்றங்களின் பின்னணியில், சமீபத்திய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தீவிரப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.