Indian Pilot : நடுவானில் கத்திக்குத்து.. 14,000 அடி கீழே பாய்ந்த விமானம்! 174 பேரை காப்பாற்றிய இந்திய விமானி!

Published : Oct 01, 2026, 03:23 PM IST

Indian Pilot : துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற விமானத்தில் நடுவானில் இரு விமானிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய கேப்டன் சுமித் மச்சார் காயமடைந்த நிலையிலும் காக்பிட் கதவை திறக்க உதவியதால் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

PREV
16
நடுவானில் கத்திக்குத்து.. 14,000 அடி கீழே பாய்ந்த விமானம்!

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளைதுபாய் விமானம் FZ1073 சென்று கொண்டிருந்தது. போயிங் 737 MAX 8 விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் காக்பிட்டில் இரு விமானிகளுக்கும் இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் இந்திய கேப்டன் சுமித் மச்சார் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், அவர் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விமானம் திடீரென மிக வேகமாக கீழிறங்கியது. விமானப் பாதை தொடர்பான தரவுகளின்படி, சுமார் 14,000 அடி உயரம் வெறும் 30 முதல் 37 வினாடிகளில் குறைந்தது. 174 பேர் இருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கக்கூடிய ஆபத்து ஏற்பட்ட நிலையில், அடுத்து நடந்ததுதான் இந்த சம்பவத்தின் முக்கியமான திருப்பம்.

இதையும் படிங்க : Empty Salna : ஹோட்டல் ஸ்டைலில் காரசாரமா பரோட்டா சால்னா! சுலபமாக செய்வது எப்படி?

26
Cockpit-ல் அப்படி என்ன நடந்தது? இந்திய பைலட்டுக்கு கத்திக்குத்து!

FZ1073 விமானம் துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது, காக்பிட்டில் இருந்த மற்றொரு விமானி கேப்டன் சுமித் மச்சாரை தாக்கியதாக இஸ்ரேல் தரப்பிலிருந்து தகவல் வெளியானது. அவர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அதன் பிறகு காக்பிட்டில் கடுமையான சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மற்றொரு விமானி விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் கூறியுள்ளார். ஆனால் இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

ஃபிளைதுபாய் வெளியிட்ட தகவலில், ஃபிளைட் டெஸ்கில் நடந்த மோதல் காரணமாக விமானம் அவசரமாக திசைதிருப்பப்பட்டு சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Mango : வீட்டுத் தொட்டியில் செடி வளர்த்து மாம்பழம் சாப்பிட ஆசையா? சூப்பர் டிப்ஸ் இதோ!

36
காயங்களுடன் இருந்தும் காக்பிட் கதவை திறந்த இந்திய விமானி!

கேப்டன் சுமித் மச்சார் பலத்த காயமடைந்திருந்த நிலையிலும், காக்பிட் கதவை திறக்க உதவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் அந்த நேரத்தில் மிக முக்கியமான தருணமாக அமைந்தது. கதவு திறந்ததும் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விமானியை கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையில், விமானத்தில் பயணிகளாக இருந்த ஃபிளைதுபாயின் கூடுதல் பயிற்சி பெற்ற விமானிகள் மற்றும் க்ரூ உறுப்பினர்களும் விமானத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவினர். கேப்டன் சுமித் மச்சாரின் இந்த நடவடிக்கையும், பயணிகள் மற்றும் க்ரூவின் தலையீடும் சேர்ந்து மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக செய்திகள்.

இதையும் படிங்க : Vegetable Prices : 1 கிலோ தக்காளி 680 ரூபாய், ஒரு வெள்ளரிக்காய் 300 ரூபாய், எலுமிச்சை கிலோ 850 ரூபாய்! என்ன கொடுமை சார் இது?

46
14,000 அடி கீழே விழுந்த விமானம்.. எப்படி மீண்டும் கட்டுப்பாட்டுக்கு வந்தது?

காக்பிட்டில் ஏற்பட்ட மோதலின்போது விமானத்தின் உயரம் மிக வேகமாக குறைந்தது. விமானம் சுமார் 34,000 அடி உயரத்தில் இருந்து சில நொடிகளில் 20,000 அடிக்கும் கீழே சென்றதாக விமான கண்காணிப்புத் தரவு அடிப்படையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டத்தில் கீழிறங்கும் வேகம் நிமிடத்துக்கு சுமார் 23,000 அடி வரை சென்றதாக தெரிகிறது.

இந்த அவசரநிலைக்கு பிறகு விமானம் டெல் அவிவ் நோக்கிய பயணத்தைத் தொடராமல் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் அங்கு பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். கேப்டன் சுமித் மச்சாரும் தபூக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சமீபத்திய தகவல்களின்படி அவர் நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Maggi Masala : டேஸ்டியான மேகி மசாலாவை வீட்லயே ரெடி பண்ணலாம்! 10 நிமிஷம் போதும்!

56
174 பேரும் எப்படி உயிர் தப்பினர்?

இந்த சம்பவத்தில் கேப்டன் சுமித் மச்சாரின் பங்கு மட்டுமல்லாமல், பயணிகள், கேபின் க்ரூ மற்றும் விமானத்தில் இருந்த கூடுதல் பயிற்சி பெற்ற விமானிகளின் பங்களிப்பும் முக்கியமாக இருந்தது. கேப்டன் காயமடைந்த பிறகும் காக்பிட் கதவை திறக்க உதவியது, பயணிகள் மற்றும் க்ரூ உள்ளே சென்று தாக்குதலாளியை கட்டுப்படுத்தியது, பின்னர் தகுதியான மற்றொரு க்ரூ விமானத்தை பாதுகாப்பாக திசைதிருப்பியது என சம்பவத்தின் தொடர்ச்சியை பல்வேறு அறிக்கைகள் விவரிக்கின்றன.

இதன் முடிவில் FZ1073 விமானம் தபூக்கில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கேப்டன் சுமித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : Egg Puff : குக்கர்ல முட்டை பப்ஸ் செய்வது எப்படி? பேக்கரி டேஸ்ட்ல வீட்டிலேயே செய்யலாம்!

66
யார் இந்த சுமித் மச்சார்? ஸ்பைஸ்ஜெட் முதல் ஃபிளைதுபாய் வரை!

மும்பையின் காட்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் கேப்டன் சுமித் மச்சார். விமானப் பயிற்சியை நியூசிலாந்தில் மேற்கொண்ட அவர், இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். சுமார் 9,750 மணி நேரத்துக்கும் அதிகமான விமானப் பறக்கும் அனுபவம் கொண்ட அவர், 2022-ல் ஃபிளைதுபாய் நிறுவனத்தில் கேப்டனாக இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தை இயக்குவதில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்றும், பயணிகளின் பாதுகாப்பே முதன்மை என முன்பு அளித்த பேட்டிகளில் கூறியிருப்பதாகவும் தி நேஷனல் தெரிவித்துள்ளது. இப்போது அந்த வார்த்தைகளுக்கு ஏற்ற வகையில், மிக மோசமான ஒரு நடுவான அவசரநிலையிலும் அவர் எடுத்த முடிவு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க : Thriller Movies : குலை நடுங்க வைக்கும் 5 திரில்லர் படங்கள்! கிளைமாக்ஸ் வரை விலகாத மர்மம்!

Read more Photos on
click me!

Recommended Stories