அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்தியாவை ஆதரித்து, அதை ஒரு முக்கியமான கூட்டாளி என்று கூறியுள்ளார். இந்தியா உக்ரைனுடன் நிற்பதாகவும், ஐரோப்பா இண்நியாவுடனான உறவுகளை ஆழப்படுத்த வேண்டும். மேற்கத்திய கூட்டணி இந்தியாவை அதன் மடியில் கொண்டு வர வேண்டும்’’ என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போருக்கு இந்தியா நிதியுதவி செய்வதாகவும், எரிசக்தி கொள்முதல் மூலம் இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவின் போருக்கு நிதியளிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டிய அதே வேளையில், இந்தியா முழுமையாக நம் பக்கம் இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஃபாக்ஸ் நியூஸில் ஒரு சிறப்பு நேர்காணலில் ரஷ்யாவின் எரிசக்தி கொள்முதல் குறித்து கேட்டபோது, "ஈரான் ஒருபோதும் நம் பக்கம் இருக்காது. ஆனால், இந்தியா முழுமையாக எங்களுடன் இருப்பதாக நான் நினைக்கிறேன். எங்களுக்கு நிச்சயமாக எரிசக்தி பிரச்சினைகள் உள்ளன. ஆனால் ஜனாதிபதி டிரம்ப் அவற்றை சரிசெய்ய முடியும்’’ எனத் தெரிவித்தார்.