விண்வெளிக்குச் செல்லும் முன், விண்வெளி வீரர்கள் மிக விரிவான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். உடல் ரீதியாக மிகவும் தகுதியானவர்கள் மட்டுமே விண்வெளி பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் தொடர்ச்சியான உடல்நலக் கண்காணிப்பு ஆகியவை நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
அடிப்படை மருத்துவ பயிற்சிகள்
மேலும் ஒவ்வொரு விண்வெளி வீரர் குழுவிலும், குறைந்தது ஒரு விண்வெளி வீரர் குழு மருத்துவ அதிகாரியாக (CMO) நியமிக்கப்படுகிறார். இந்த அதிகாரிக்கு முதலுதவி, காயங்களுக்கு சிகிச்சை, ஊசி போடுவது, பல் பிடுங்குவது போன்ற அடிப்படை மருத்துவ பயிற்சிகள் சுமார் 40 மணி நேரம் வழங்கப்படுகின்றன.
இது தவிர அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் அடிப்படை முதலுதவி, சி.பி.ஆர் (CPR) மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தவிர விண்வெளி வீரர்கள் தங்கள் உடல்நலனை சுயமாக மதிப்பிட்டு, சில சிகிச்சைகளை மேற்கொள்ளவும் தனியாக பயிற்சி பெறுகின்றனர்.