ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரேசிலுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் 114 குதிரைகளுடன் கூடிய சம்பிரதாயப்பூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரேசிலுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் 114 குதிரைகளுடன் கூடிய சம்பிரதாயப்பூர்வமான மற்றும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரேசில் அதிபர் லுாலா டி சில்வா, அல்வோராடா மாளிகையின் நுழைவாயிலில் காத்திருந்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
25
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம்
பிரதமர் மோடி கடந்த ஜூலை 2 ஆம் தேதி தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதில் கானா மற்றும் டிரினிடாட் டொபாகா ஆகிய நாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் சென்றடைந்தார். பிரேசில் அதிபர் லுாலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி முக்கியப் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
35
பிரேசிலில் மோடி
இது பிரதமர் மோடியின் நான்காவது பிரேசில் பயணம் ஆகும். இதற்கு முன்னர், அவர் ஜூலை 2014 இல் முதன்முறையாக பிரேசில் சென்றார். அதைத் தொடர்ந்து, 2019 இல் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும், கடந்த ஆண்டு நவம்பரில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவும் அவர் பிரேசில் வந்திருந்தார்.
பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சிலி அதிபர் கேப்ரியல் போரிக் போண்டை சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் மோடி, "இந்தியா-சிலி நட்பு மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது" என்று தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
55
விருது பெறும் மோடி
இந்தப் பயணத்தில் பிரேசில் நாட்டின் மிக உயரிய விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும். பிரிக்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து, பிரேசிலுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.