தமிழரின் பெயரை மகனுக்கு வைத்த எலான் மஸ்க்.. உலகம் வணங்கும் சந்திரசேகர் யார் தெரியுமா?

Published : Dec 03, 2025, 09:20 AM IST

எலான் மஸ்க் தனது மகனுக்கு விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகரின் பெயரை வைத்துள்ளார். அவரது வாழ்க்கை உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எலான் மஸ்கின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

PREV
12
தமிழ் விஞ்ஞானி குறித்து எலான் மஸ்க்

உலகின் பிரபல தொழிலதிபர் எலான் மாஸ்க் தனது மகனில் ஒருவருக்கு இந்தியாவின் விஞ்ஞான மேதை சுப்ரமணியன் சந்திரசேகரின் பெயரை வைத்துள்ளார் என்று வெளிப்படையாக கூறியபோது, பல இந்தியர்களுக்கே இந்த மகத்தான தமிழரின் பயணம் தெரியாது என்பதே விரக்திகரமான உண்மையாகும்.

ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், மனைவியான ஷிவோன் ஜிலிஸ் “அரை இந்தியர்” என்றும், அவர்களின் குழந்தைகளில் ஒருவரின் நடுப்பெயர் ‘சேகர்’ நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகரரின் நினைவாக வைக்கப்பட்டதாக கூறினார். ஜிலிஸ் கனடாவில் தத்தெடுப்பு மூலம் வளர்ந்தார் என்றும், மஸ்க் மற்றும் ஜிலிஸுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரிவித்தார். ஜிலிஸ் நியூராலிங்கில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்ரமணியன் சந்திரசேகரன் லாகூரில் 1910ல் பிறந்தார். அவர் சிறு வயதிலேயே கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் காட்டினார். அவர் நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமனின் மருமகனாவார். படிப்பில் சிறந்த அவர், 1930ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க இங்கிலாந்து சென்றார். அந்தப் பயணத்தின் போது, கடலில் பயணித்த கப்பல் மேல் அவர் ஒரு பெரிய கண்டுபிடிப்பைச் செய்தார். ஒரு நட்சத்திரம் எவ்வளவு நிறை வரை தாங்கி நிற்கும் என்பதை அவர் கணக்கிட்டார். இது இன்று “சந்திரசேகர் எல்லை” என்று அழைக்கப்படுகிறது.

22
சுப்ரமணியன் சந்திரசேகரர்

ஆனால் அவரது கண்டுபிடிப்பை எல்லாரும் உடனே நம்பவில்லை. 1935ல் ஒரு பிரபல விஞ்ஞானி அவரின் ஆய்வை கேலி செய்தார். இந்த இகழ்ச்சி சந்திரசேகரருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் தன் ஆராய்ச்சியை நம்பி தொடர்ந்து உழைத்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் கற்பித்தார். அவர் அமைதியாகவும், ஆராய்ச்சியில் ஆழ்ந்தும் வாழ்ந்தார்.

காலம் கடந்த பிறகு, அவரது எண்ணங்கள் உண்மையானவை என்று உலக அறிவியலாளர்கள் நிரூபித்தனர். 1983ல் சந்திரசேகரர் நோபல் பரிசு பெற்றார். அது அவரது ஆய்வுகளுக்கான பெரிய மரியாதையாக கருதப்படுகிறது. 1995ல் அவர் மறைந்தாலும், விண்வெளி அறிவியலில் அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கிறது. அமெரிக்காவில் உள்ள “Chandra Space Observatory” அவரின் பெயரில் உள்ளது. சந்திரசேகரரின் வாழ்க்கை நமக்கு, உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் உலகமே ஒரு நாள் நம்மை அறியும் என்பதைக் கற்றுத் தருகிறது.

சந்திரசேகரரின் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒரு கருத்தை நினைவூட்டுகிறது. இன்று உங்களை யார் வேண்டுமானாலும் கேலி செய்யலாம். ஆனால் ஒருநாள் உண்மையை பிரபஞ்சமே ஒப்புக் கொள்ளும் என்பதே. சந்திரசேகன் பற்றிய எலான் மஸ்கின் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories