Published : Feb 20, 2025, 06:10 PM ISTUpdated : Feb 20, 2025, 08:15 PM IST
Tesla factory in India: எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது "மிகவும் நியாயமற்றது" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். வரியை கணிசமாக உயர்த்தும் நடவடிக்கைக்கு மத்தியில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைப்பதற்கு டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளர் சீன் ஹானிட்டிக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் ஆலையை இந்தியாவில் அமைக்கத் திட்டமிட்டிருப்பது மிகவும் நியாயமற்றது என்று கூறினார். பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தை அடுத்த சில நாட்களில் டிரம்ப் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
25
Tesla manufacturing unit in India
இந்த நேர்காணல் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. டிரம்ப் இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவது குறித்து தனது அதிரும்தி மீண்டும் வலியுறுத்தினார். அவரது கருத்தை டெஸ்லாவின் உரிமையாளரும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தலைவருமான என் மஸ்க் ஆமோதித்தார்.
35
US President Donald Trump
ஒவ்வொரு நாடும் அமெரிக்கா மீது வரி விதிப்பதன் மூலம் பயன் அடைகின்றன என வலியுறுத்திய டிரம்ப், இந்தியாவில் கார்கள் மீதான வரிகளை உதாரணம் காட்டி தனது பேச்சைத் தொடங்கினார்.
அப்போது எலான் மஸ்க்கிடம் திரும்பி, "உதாரணமாக, உங்களுக்கு இந்தியாவில் ஒரு காரை விற்பது சாத்தியமற்றது. இது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் நான் நினைக்கிறேன்..." என்று எலான் மஸ்க் கூறினார்.
45
Elon Musk Tesla cars
குறைந்தபட்சம் $35,000 விலையுள்ள மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரி இந்தியாவில் 15%. மேலும், இது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இந்நிலையில், எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலையை கட்ட விரும்பினால், அது நியாயமற்றது அது அமெரிக்காவுக்குச் செய்யும் அநியாயம் என்று டிரம்ப் கூறினார்.
"நான் பிரதமர் மோடியிடம் சொன்னேன்... நீங்கள் நியாயமாக நடந்துகொண்டால், நாங்களும் உங்களுடன் மிகவும் நியாயமாக நடந்துகொள்வோம்" என்று டிரம்ப் கூறினார்.
55
India Tariffs on Cars