ஆபரேசனை பாதியில் விட்டுட்டு நர்ஸ் உடன் டாக்டர் செய்த அசிங்கம்! வெளியான அதிர்ச்சி சம்பவம்!

Published : Sep 13, 2025, 11:00 AM IST

Doctor: அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் சுஹைல் அஞ்சும் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டுவிட்டு செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்டதால் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது. 

PREV
15
சுஹைல் அஞ்சுமின் மருத்துவ உரிமம் ரத்து

லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் சுஹைல் அஞ்சும் அறுவை சிகிச்சையை பாதியில் விட்டுட்டு அறுவை சிகிச்சையின் மற்றொரு அறையில் செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2023 செப்டம்பரில் நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு 44 வயதான டாக்டர் சுஹைல் அஞ்சுமின் மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டது. கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டாம்சைட் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது. மீண்டும் லண்டனில் பணிபுரிய மருத்துவர் சுஹைல் அஞ்சும் விண்ணப்பித்த பிறகு, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

25
அறுவை சிகிச்சை அறை

மான்செஸ்டரில் உள்ள பொது மருத்துவக் குழுமத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில், தான் செய்த தவறை ஒப்புக் கொண்ட மருத்துவர் சுஹைல் அஞ்சும், அந்தச் செயல் வெட்கக்கேடானது என்று கூறினார். டாம்சைட் மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக மருத்துவர் சுஹைல் அஞ்சும் பணிபுரிந்தார். தனக்கு ஓய்வு நேரம் வேண்டும். தன்னுடன் வர வேண்டும் என்றும் அறுவை சிகிச்சையில் உதவிய செவிலியரிடம் கூறிவிட்டு, மருத்துவர் சுஹைல் அஞ்சும் அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே சென்றார். பின்னர் அருகில் காலியாக இருந்த அறுவை சிகிச்சை அறையில் தவறான செயலில் ஈடுபட்டார்.

35
ஒரே அறையில் மருத்துவர் செவிலியர்

சர்ச்சைக்குரிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய செவிலியரையும் மான்செஸ்டரில் உள்ள பொது மருத்துவக் குழுமம் விசாரணைக்கு அழைத்ததாக பிபிசி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்பாராத விதமாக அந்த அறுவை சிகிச்சை அறைக்கு வந்த மற்றொரு செவிலியர், மருத்துவர் சுஹைல் அஞ்சுமும் பணியில் இருந்த செவிலியரும் உடலுறவில் ஈடுபடுவதைப் பார்த்தார்.

45
தவறை ஒப்புக்கொண்ட மருத்துவர் சுஹைல்

எட்டு நிமிடங்களுக்கு மேல் அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியே சென்ற மருத்துவர் சுஹைல் அஞ்சும், பின்னர் அறுவை சிகிச்சை அறைக்குத் திரும்பி அறுவை சிகிச்சையை தொடர்ந்தார். இந்த சம்பவத்தைக் கண்ட செவிலியர் புகார் அளித்ததையடுத்து, மருத்துவக் குழுமத்திற்கு இந்த சம்பவம் தெரியவந்தது. மருத்துவராகப் பணிபுரிய தகுதி உள்ளதா என்பது குறித்த விசாரணையின்போது, தான் செய்த தவறை மருத்துவர் சுஹைல் அஞ்சும் ஒப்புக் கொண்டார்.

55
மருத்துவர் சுஹைல் அஞ்சும்

கவலைக்கிடமான நிலையில் இருந்த நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தான் ஓய்வு நேரம் எடுத்துக் கொண்டதாக மருத்துவர் சுஹைல் அஞ்சும் குழுமத்தில் தெரிவித்தார். தனது தவறை மன்னித்து மீண்டும் லண்டனில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவர் சுஹைல் அஞ்சும் மருத்துவக் குழுமத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய சுகாதார சேவையையும் சக ஊழியர்களையும் அவமதிக்கும் வகையில் தான் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். தனது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, தவறை சரிசெய்ய ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று மருத்துவர் சுஹைல் அஞ்சும் மருத்துவக் குழுமத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories