அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் ஆர்வலர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் பற்றி, அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் அளித்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் ஆர்வலர் சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைப் பற்றி, அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் அளித்த தகவலின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.
24
டைலர் ராபின்சன்
கைது செய்யப்பட்டவர் உட்டாவைச் சேர்ந்த 22 வயதான டைலர் ராபின்சன் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ட்ரம்ப், அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர் என்பதில் தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
டிரம்ப் மேலும் கூறுகையில், "அந்த நபருக்கு நெருக்கமான ஒரு மதகுரு, அவரை ஒரு அமெரிக்க மார்ஷல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டார். நாம் தேடிய நபர் இவர்தான் என்று நம்புகிறோம்," என்று கூறினார்.
34
உட்டா துப்பாக்கிச்சூடு சம்பவம்
31 வயதான சார்லி கிர்க், உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது, புதன்கிழமை அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை பகல் நேரத்தில் நடந்ததுடன், வீடியோவிலும் பதிவாகியுள்ளது.
கிர்க், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது, ஒரே ஒரு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. பின், கிர்க் கழுத்தைப் பிடித்தபடி ரத்தம் கொட்ட கீழே சரிவதும், பயந்துபோன பார்வையாளர்கள் சிதறி ஓடுவதும் சமூக ஊடகங்களில் பரவும் வீடியோக்களில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு, கடந்த 48 மணி நேரத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மிகப் பெரிய ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையை நடத்தின. 20-க்கும் மேற்பட்ட ஏஜென்சிகள் மற்றும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டனர். FBI வெளியிட்டுள்ள வீடியோவில், அமெரிக்கக் கொடியின் உருவம் பொறிக்கப்பட்ட சட்டை அணிந்த ஒருவர், அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் கூரையில் இருந்து தப்பிச் செல்வது பதிவாகியுள்ளது.
சந்தேகநபரைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு $100,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 88 லட்சம்) வெகுமதி வழங்கப்படும் என்று FBI அறிவித்திருந்தது. இந்த வெகுமதி அறிவிப்பின் மூலம் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை FBI உறுதிப்படுத்தவில்லை.