சீன ராணுவத்தை அமெரிக்காவிடம் காட்டிக் கொடுத்த ஜாங்... ஜி-ஜின்பிங்கின் முதுகில் குத்திய பால்ய நண்பன்..!

Published : Jan 26, 2026, 11:39 AM IST

ஜாங் யூக்ஸியா பணத்திற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும், அதனால்தான் அவர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சீன இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். 

PREV
14
பணத்திற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்தத ஜாங்

அதிர்ச்சியூட்டும் வகையில் சீனாவின் ஜி ஜின்பிங் அரசு உயர்மட்ட ராணுவ அதிகாரியான ஜாங் யூக்ஸியாவை பதவி நீக்கம் செய்துள்ளது. ஜாங் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டவர். இருவரும் குழந்தை பருவம் முதல் நண்பர்கள். இப்போது, ​​ஜாங் நீக்கப்பட்டது தொடர்பாக ஒரு பெரிய ரகசியம் வெளிவந்துள்ளது. ஜாங் யூக்ஸியா பணத்திற்காக நாட்டைக் காட்டிக் கொடுத்ததாகவும், அதனால்தான் அவர் தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சீன இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

சீன அதிகாரிகள் கூறியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஜாங் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஜாங் பணத்திற்காக அமெரிக்காவுடன் அணுசக்தி தொடர்பான உளவுத்துறையைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறுகிறது. இதை அறிந்ததும், ஜி ஜின்பிங் அவரை தனது பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். ஜாங்கை நீக்கும் முடிவை ஒரு மறு சீரமைப்பு நடவடிக்கை நடவடிக்கை என்று கூறுகிறது. இதை சீன அதிபரால் இராணுவத்திற்குள் ஊழலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜி ஜின்பிங்கிற்கு எதிரான சதியில் ஜாங் ஈடுபட்டதாகவும் சீன அரசியல் வட்டாரங்களில் பேச்சு உள்ளது.

24
இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?

சீனாவின் அணுசக்தி திட்டங்களை நிர்வகிக்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனமான சீனா தேசிய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் கு ஜுன், சமீபத்தில் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில் ஜாங் பற்றிய தகவல்களையும் வழன்கப்பட்டுள்ளது. 75 வயதான ஜாங், சீனாவின் அணு ஆயுதங்கள் பற்றிய தொழில்நுட்ப தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்து கொண்டதாக அறிக்கை கூறுகிறது.

சீனாவின் அணு ஆயுதங்கள் அமெரிக்காவின் டார்கெட்டாக உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஒரு அறிக்கையில் சீனா தொடர்ந்து அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதாகக் கூறினார். அமெரிக்காவும் சோதனைகளை நடத்த உள்ளது. சீனாவில் சுமார் 600 அணு ஆயுதங்கள் உள்ளன.

34
யார் இந்த ஜாங் யூசியா?

ஜாங் யூக்ஸியா 1950 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் பிறந்தார். அவரது தந்தை ஜாங் யூக்ஸியா, ஒரு முக்கிய சீன புரட்சிகரத் தலைவர். ஜாங் 1968 ஆம் ஆண்டு சீன இராணுவத்தில் சேர்ந்தார். 2012 ஆம் ஆண்டு ஜி ஜின்பிங் சீனாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டபோது ஜான் முக்கிய பதவியைப் பெற்றார். அந்த ஆண்டு, ஜாங் ஆயுதத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2017 ஆம் ஆண்டில், ஜாங் இராணுவத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இது ஜனாதிபதிக்குப் பிறகு சீனாவில் இரண்டாவது மிக முக்கியமான பதவி. ஜாங்கும், ஜி ஜின்பிங்கும் குழந்தை பருவ நண்பர்கள். எனவே, அவர் சீன அரசியலில் மிகவும் பாதுகாப்பான பதவியாகக் கருதப்பட்டார். ஜாங் 2027-ல் ஓய்வு பெறவிருந்தார்.

44
ஊழலால் பாதிக்கப்பட்டுள்ள சீனா இராணுவம்

சீனாவின் இராணுவம் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளது. 2023 முதல், சீனாவில் 80 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனலின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள நாடுகள் கணிசமான அளவு ஆயுதங்களை விற்றாலும், சீனா பின்தங்கியுள்ளது. ஊழல் சீன நிறுவனங்கள் பல ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தடுத்துள்ளது. இதன் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இதனால், சீன அரசு இப்போது உச்ச தலைவர் ஜி ஜின்பிங் தலைமையில் ஒரு இராணுவ தூய்மைப்படுத்தும் மறுசீரமைப்பை தொடங்க முடிவு செய்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories