கிரீன்லாந்தை வாங்கியே தீருவேன்.. உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப் சூளுரை! பதறும் ஐரோப்பியா!

Published : Jan 21, 2026, 09:58 PM IST

கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவது குறித்து விவாதிக்க ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நேட்டோவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

PREV
13
கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்கும்

டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 56வது ஆண்டு உச்சிமாநாட்டில் பேசிய டொனால்ட் டிரம்ப், ''கிரீன்லாந்து என்னும் இந்த மாபெரும் நிலப்பரப்பை, இந்த மாபெரும் பனிக்கட்டியைப் பாதுகாத்து, அதை மேம்படுத்தி, ஐரோப்பாவிற்கு நல்லதாகவும், பாதுகாப்பானதாகவும், நமக்கும் நல்லதாகவும் மாற்றக்கூடிய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. 

நமது வரலாறு முழுவதும் பல பிரதேசங்களை நாம் வாங்கியதைப் போலவே, அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்குவது குறித்து மீண்டும் விவாதிக்க உடனடி பேச்சுவார்த்தைகளை நான் கோருவதற்கு இதுவே காரணம்'' என்று கூறியுள்ளார்.

23
நேட்டோவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது

தொடர்ந்து பேசிய டிரம்ப், ''டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பாக மேம்படுத்தி பாதுகாக்க முடியும். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நன்மை பயக்கும். இது நேட்டோவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது. நேட்டோ கூட்டணியின் பாதுகாப்பை பெரிதும் மேம்படுத்தும்.

நேட்டோவுக்கு அதிகம் உதவியுள்ளேன்

நேட்டோவால் அமெரிக்கா மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறது. நாங்கள் அதிகம் கொடுக்கிறோம். ஆனால் குறைவாகவே பெறுகிறோம். நான் பல ஆண்டுகளாக நேட்டோவை விமர்சித்து வருகிறேன். மற்ற எந்த அதிபரை விடவும் நேட்டோவுக்கு நான் அதிகம் உதவியுள்ளேன். எனது முதல் பதவிக்காலத்தில் நான் தலையிடவில்லை என்றால் நேட்டோ இருந்திருக்காது'' என்று கூறியுள்ளார்.

33
டிரம்ப் கோரிக்கையை நிராகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை வாங்குவதில் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். கிரீன்லாந்தை வாங்கினால் தான் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்க முடியும். 

தேசிய பாதுகாப்பிற்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து தேவை. நாங்கள் உருவாக்கும் கோல்டன் டோமிற்கு இது இன்றியமையாதது என்று டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தலைவர்கள் டிரம்ப்பின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories