புஸ்வானமா சரவெடியா? சீன ராணுவ அணிவகுப்பை பார்த்து மிரண்டு போன மேற்குலகம்!

Published : Sep 05, 2025, 06:44 PM IST

சீனாவின் வெற்றி விழா ராணுவ அணிவகுப்பில் அதிநவீன ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகள், ராக்கெட் ஏவுதளம், அதிநவீன ட்ரோன்கள் ஆகியவை இதில் அடங்கும். இது உலக நாடுகளுக்கு வலுவான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

PREV
17
மேலைநாடுகளை மிரள வைத்த சீனாவின் ராணுவ அணிவகுப்பு

செப்டம்பர் 3ஆம் தேதி சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பு உலக நாடுகளுக்கு ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற 80 ஆண்டு நிறைவு கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின்போது, மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் வகையில், முற்றிலும் புதுமையான அதிநவீன ஆயுதங்களை முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது.

பொருளாதார பலத்தில் அமெரிக்காகவுக்கு போட்டியாக இருந்துவரும் சீனா, இனி ராணுவ பலத்திலும் வல்லரசாகும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வெற்றி விழா அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஐந்து வகை ஆயுதங்கள் உலக ராணுவ நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

27
DF-61: கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை

DF-61 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது எதிரிகளின் முக்கிய இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லவும் வல்லது. இந்த ஏவுகணையின் அமைப்பு பற்றிய தகவல்கள் அதிகம் தெரியவராத நிலையில், இது ஒரு மர்மமான அச்சுறுத்தும் ஆயுதமாகக் கருதப்படுகிறது.

37
DF-5C: உலகின் எந்த மூலையிலும் தாக்கும் ஏவுகணை

DF-5C ஏவுகணை, எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள எந்த இலக்கையும் தாக்கும் சக்தி கொண்டது. இது ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டுகளை விட 200 மடங்கு சக்தி வாய்ந்தது. 4 மெகா டன்கள் எடையுள்ள குண்டை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை இது.

47
HQ-19, HQ-12, HQ-29: அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள்

ராணுவ அணிவகுப்பில் HQ-19, HQ-12, மற்றும் HQ-29 என்ற புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளையும் சீனா காட்சிப்படுத்தியுள்ளது. இவற்றில் HQ-19 என்பது அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த THAAD வான் பாதுகாப்பு அமைப்புடன் ஒப்பிடப்படுகிறது. இது, வான் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சீனா அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

57
PCH-191 ராக்கெட் ஏவுதள அமைப்பு

PCH-191 என்பது அதிநவீன ராக்கெட் ஏவுதள அமைப்பாகும். பல ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் ஏவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதளத்தின் மூலம் 500 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடியும் எனக் கூறப்படுகிறது. இது உலகில் உள்ள சக்திவாய்ந்த ராக்கெட் ஏவுதளங்ளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

67
அதிநவீன ட்ரோன்கள்

சீனாவின் ராணுவ அணிவகுப்பில் ட்ரோன்கள் பிரதான இடத்தைப் பிடித்தன. உளவு பார்ப்பது முதல் இலக்குகளை துல்லியமாக தாக்குவது வரை பலவிதமான பணிகளை இந்த ட்ரோன்கள் செய்து காட்டின. ஆளில்லா விமான தொழில்நுட்பம் மற்றும் அதன் உற்பத்தியில் சீனா உலக அளவில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

77
சீனாவின் இலக்கு என்ன?

வெற்றி விழா ராணுவ அணிவகுப்பின் முடிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன மக்கள் விடுதலை ராணுவத்தை உலகத்தரம் வாய்ந்த ஆயுதப் படையாக மாற்றுவோம் என சூளுரைத்தார். இது, பொருளாதார வல்லரசாக மட்டும் இல்லாமல், ராணுவ வல்லரசாகவும் தன்னை நிலைநிறுத்த சீனா விரும்புகிறது என்பதை ஜின்பிங்கின் பேச்சு உணர்த்தியுள்ளது. இதனால்தான் சீனாவின் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்கு வலுவான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories